கல்முனை கிறீன்பீல்ட் சுனாமி வீட்டுத்திட்டத்தில் குடிநீரை நிறுத்தியமைக்காக மக்கள் சட்ட நடவடிக்கை

பாறுக் ஷிஹான்-
ல்முனை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் இடைநிறுத்தப்பட்ட குடிநீரை மக்களுக்கு தற்காலிகமாக பெற்றுக் கொடுக்கப்பட்டதாக வந்துள்ள செய்தியை ஆதாரங்களுடன் மறுத்துள்ளதுடன் பொய்யான செய்திகளை அரசியலுக்காக பரப்பி மக்களை குழப்பமடைய செய்ய வேண்டாம் கல்முனை கிறீன்பீல்ட் சுனாமி வீட்டுத்திட்ட தற்காலிக ஆதன முகாமைத்துவக் குழுவினர் கேட்டுள்ளனர்.

இன்றைய தினம் (21) கல்முனை கிறீன்பீல்ட் சுனாமி வீட்டுத்திட்ட வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பில் மேற்கண்டவாறு இக்குழு தெரிவித்தது.

மேலும் கருத்து தெரிவிக்கையில்
கல்முனை கிறீன்பீல்ட் சுனாமி வீட்டுத்திட்டத்தில் 438 குடும்பங்கள் வாழ்கின்ற மக்களின் அடிப்படை தேவையான குடிநீரை கடந்த 15.11.2018 திகதியில் இருந்து நிறுத்தியமைக்காக மக்கள் எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள தயாராகி வருகின்றனர்.
குறித்த குடிநீரை அம்மக்கள் பயன்படுத்தியதற்கு அமைய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு செலுத்த வேண்டிய ரூபா 921036ஃ- செலுத்தப்படாமையால் நீர்விநியோகம் துண்டிக்கப்பட்டது.

இதனால் கடந்த சில நாட்களுக்கும் மேலாக அங்கு வாழும் மக்கள் குடிநீர் இல்லாமல் பெரும் அசௌகரியத்திற்குள்ளாகினர்.

இதற்கு காரணம் கல்முனை கிறீன்பீல்ட் சுனாமி வீட்டுத்திட்டத்தின் கடந்த பல வருடங்களுக்கு மேலாக இயங்கி வந்த கல்முனை கிறீன்பீல்ட் கூட்டு ஆதன முகாமைத்துவக் குழுவினர் அங்கு வாழும் மக்கள் குடி நீர் பட்டியலுக்கு செலுத்திய பெருந்தொகை பணத்தை கையாடல் செய்துள்ளமையும் திடிரென அக்குழு செயலிழந்தமையும் ஆகும் என பாதிக்கப்பட்ட அம்மக்கள் குற்றஞ்சுமத்துவதோடு டீமற்குறித்த ஆதன முகாமைத்துவக் குழுவினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள தயாராகி வருகின்றனர்.
இதற்காக தற்காலிக ஆதன முகாமைத்துவக் குழுவினர் என மீண்டும் ஒரு புதிய அமைப்பினை உருவாக்கி குறித்த பிரச்சினையை ஆராய்ந்து இன்று(21) முதல் கட்டமாக மீண்டும் மக்களுக்கு குடிநீர் பெற்றுக்கொள்வதற்கு நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு வழங்க வேண்டிய ஒன்பது லட்சத்து இருபத்தோராயிரத்து முப்பத்தி ஆறு ரூபாய் பணத்தையும் (ரூபா 921036ஃ- யும்) செலுத்த புதிய இக்குழு மக்கள் ஆதரவுடன் தற்போது களமிறங்க முடிவு செய்துள்ளது.
இதன் படி அவ்வீட்டு திட்டத்தில் உள்ள 430 குடும்பங்களிடம் தலா 2500 ரூபா வீதம் வசுலித்து நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு வழங்க வேண்டிய ஒன்பது லட்சத்து இருபத்தோராயிரத்து முப்பத்தி ஆறு ரூபாய் பணத்தையும் (ரூபா 921036ஃ- யும்) உடனடியாக மீள்செலுத்த குறித்த தற்காலிக குழு நாளை(22) இரவு 9 மணிக்கு கால அவகாசம் கொடுத்துள்ளது.

இதன் படி குறித்த பணத்தை அப்பகுதி வீட்டுத்திட்டத்தில் குடியிருக்கும் மக்கள் தமது காரியாலயத்தில் வந்து ஒப்படைத்து துண்டிக்கப்பட்டுள்ள அத்தியவசியமான குடிநீரை மீள பெற முன்வருமாறு அக்குழு கேட்டுள்ளது.

அத்துடன் குறித்த குழு ஊடக இன்றைய ஊடக சந்திப்பில் கல்முனை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட குடிநீரை மக்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டதாக வந்துள்ள செய்தியை ஆதாரங்களுடன் மறுத்துள்ளதுடன் பொய்யான செய்திகளை அரசியலுக்காக பரப்பி மக்களை குழப்பமடைய செய்ய வேண்டாம் என கேட்டுள்ளது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -