எம்.ஐ.எம்.அஸ்ஹர் , எம்.எம்.ஜபீர்-
சாய்ந்தமருது ஜீனியஸ்7 விருதுப் பிரிவு கௌரவிப்பு ( Genius7 Award Unit Sainthamaruthu, Ampara ) ஒழுங்கு செய்திருந்த பிரித்தானிய சர்வதேச டியுக்எடின் பார்க் கௌரவிப்பிற்கான கையேடுகள் ( The Duke of Edinburgh's Award Record Book ) வழங்கும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருதுஇளைஞர் பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது.
அம்பாறை மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் நுகர்வோர்பாதுகாப்பு அதிகார சபையின் புலனாய்வு அதிகாரியுமான இஷட்.எம்.ஸாஜித் தலைமையில் இடம்பெற்றமேற்படி நிகழ்வில் முன்னாள் உயர்கல்வி பிரதியமைச்சர்எம்.எம்.மயோன் முஸ்தபா பிரதம அதியாகவும் , மாவட்ட தேசியஇளைஞர் சேவைகள் மன்ற உதவிப் பணிப்பாளர் எஸ்.எம்.ஏ.லத்தீப் ,முன்னாள் கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் எம்.ஐ.எம்.சதாத், சாய்ந்தமருது தொழில் பயிற்சி நிலைய பொறுப்பதிகாரி எம்.எம்.உதுமாலெவ்வை , சிரேஸ்ட ஆசிரியர் எம்.ஐ.எம்.அஸ்ஹர் ,சாய்ந்தமருது 7 ஆம் பிரிவு கிராம சேவக உத்தியோஸ்தர் எம்.சி.பாறூக், இளைஞர் சேவைகள் அதிகாரி பீ.எம்.றியாத் , ஜீனியஸ்7 விருதுப்பிரிவின் உதவி தலைவரும் பேரதெனிய பல்கலைக்கழக பொறியியல்பீட மாணவருமாகிய ஏ.எம்.அப்ஸால் இலாஹி , ஆசிரியர்களானஎச்.எம்.ஸிரோஸான் , ஏ.ஜி.எம்.அப்ராத் , கணக்காளர் ஹில்மி சம்சுதீன்ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
சாய்ந்தமருது,கல்முனை,பொத்துவில்,நிந்தவூர் மற்றும் சம்மாந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 87 இளைஞர் யுவதிகளுக்கு சர்வதேச டியுக்எடின் பார்க் கௌரவிப்பிற்கான கையேடுகள் அதிதிகளினால் வழங்கிவைக்கப்பட்டதோடு முன்னாள் உயர்கல்வி பிரதியமைச்சர்எம்.எம்.மயோன் முஸ்தபா அவர்களுக்கு ஏற்பாட்டு குழுவினரால்பொன்னாடை போர்த்தி பிரதம அதிதியினால் அம்பாறை மாவட்டஇளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் புலனாய்வு துறை அதிகாரியும் ஜினியஸ்7 விருதுப் பிரிவின்தலைவருமான இஷட்.எம்.ஸாஜித் அவர்களுக்கு நினைவுச் சின்னம்வழங்கி வைக்கப்பட்டது.
மேற்படி நிகழ்வுகளை ஏ.எம்.ரோஸான் தொகுத்து வழங்கினார்.

