பாராளுமன்ற நடவடிக்கைகளை பார்வையிட பொதுமக்கள் மற்றும் விசேட விருத்தினருக்கு இன்றும் அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் பாராளுமன்ற அமர்வின் போது செய்தி சேகரிக்க ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, பாராளுமன்ற தெரிவுக் குழு தொடர்பான மின்னணு வாக்கெடுப்பு கடந்த வௌ்ளிக்கிழமை நடைபெற்றது.
குறித்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் வௌிநடப்பு செய்தனர். இந்நிலையில் மின்னணு வாக்கெடுப்புக்கு ஆதரவாக 121 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.
பாராளுமன்றில் குறித்த வாக்கெடுப்பிற்கு முன்னர், தெரிவுக் குழுவில் அங்கம் வகிக்க தனிக் கட்சி உறுப்பினர் என்ற வகையில் தனக்கு வாய்ப்பு ஒன்றை வழங்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சபாநாயகரிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும், இன்று இடம்பெறவுள்ள பாராளுமன்ற அமர்வில். பங்கேற்பதா? இல்லையா? என்பது குறித்து இன்று முற்பகல் இடம்பெறவுள்ள பாராளுமன்ற குழுக் கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.