உளவளத்துணை உத்தியோகத்தர், சமூக நலன்புரி மற்றும் ஆரம்பக் கைத்தொழில் அமைச்சு, பிரதேச செயலகம், அக்கரைப்பற்று.
ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் 10ம் திகதி சர்வதேச உளநல தினம் பிரகடனப்படுத்தப்படுத்தப்பட்டு, அதைத் தொடர்ந்து சர்வதேச உளநல வாரம் பிரகடனமாக்கப்பட்டு, உலக நாடுகளுக்கு இடையில் உளவளம் பேணலின் அவசியம் தொடர்பாக பல்வேறு கருத்துக்கள், சிந்தனைகளை மைய்யப்படுத்திய நிகழ்ச்சித்திட்டங்கள் அமுல்படுத்தப்படுகின்றன. அதேபோன்று, நமது நாட்டில் ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் 15ம் திகதி தேசிய உளநல தினம் அரசினால் பிரகடனம் செய்யப்பட்டு சமூக சேவைகள் அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய உளவளத்துணைச் செயலகத்தினால் பல்வேறு நிகழ்சிகள் அத்தினத்தில் எமது நாட்டில் முன்னெடுக்கப்படுவதனை நாம் பார்க்க முடியும்.
அந்தவகையில், இம்மாதம் 15ம் திகதி 'மாறும் உலகில் இளைஞர்களும் உளநல ஆரோக்கியமும் (Young People and Mental health in a changing world)”
என்ற கருப்பொருளில் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அத்தோடு, இக்கருப்பொருளைத் தாங்கி பல்வேறு நிகழ்வுகள் மாவட்ட, மற்றும் பிரதேச மட்டங்களில் உளவளத்துணை உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்படவுள்ளன.
அதனையொட்டி, மேலுள்ள கருப்பொருளுடன் தொடர்பான ஒரு கண்ணோட்டத்தை இத்தருணத்தில் வழங்க முனைகின்றேன்.
இளைஞர்கள்:
இளைஞர்கள் என்போர் முதிர்ச்சிக்கும் பிள்ளைப் பருவத்திற்கும் இடையிலான நிலைமாறும் பருவம். அதாவது முதிர்ச்சியின் அடையாளங்களும் பிள்ளைத்தனத்தின் தன்மைகளும் கலந்திருக்கும் பருவம். ஒரு மனிதனின் வாழ்வில் புயலடிக்கும் பருவம், உள்ளகக் குழப்பம் நிறைந்த பருவம், புரட்சிகரமான பருவம், கட்டுக்கடங்காத பருவம் என இப்பருவத்தினை வர்ணிப்பர்.
ஒரு மனிதனின் இளமைப்பருவமானது 13 வயது தொடக்கம் சுமார் 30 வயது வரையான காலகட்டத்தை உள்ளடக்கி இருக்கும் என வரையறை செய்யலாம். இந்த வயது வரையறை தொடர்பில் உளவியலாளர்களிடையே பல அபிப்பிராய பேதங்கள் உண்டு. இருந்தாலும் இந்த இளமைப்பருவத்திற்குள் ஒரு மனிதனின் பதின்ம பருவமும் கட்டிளமைப்பருவமும் உள்ளடங்கி காணப்படும் என்பதில் உறுதியான நிலைப்பாட்டிற்குள் வரமுடியும்.
இவர்களது முக்கியத்துவத்தைப் பொறுத்தவரையில், இளைஞர்கள் ஒரு சமூகத்தின் முதுகெலும்பாகும். அதுமாத்திரமன்றி இளைஞர்களை வளப்படுத்துவதிலும் வழிப்படுத்துவதிலுமே ஒரு சமூகத்தின் தலை விதி அமைந்துள்ளது. அதுமாத்திரமன்றி ஒரு சமுகத்தின் பலம் மற்றும் சக்தி இந்த இளைஞர்களே ஆகும் என்றால் அது மிகையாகாது.
ஒரு மனிதன் குழந்தைப்பருவம், பிள்ளைப்பருவம் என்பவற்றை கடந்து இளமைப்பருவத்தினை அடையும் போது அவனில் பல மாற்றங்கள் ஏற்படுவதை இயல்பாக அவதானிக்க முடியும். அந்தவகையில்,
இளைஞர் பருவத்தினரைப் பாதிக்கும் காரணிகள்:
• உடல் உள மாற்றங்கள்
• குடும்பச் சூழல்
• பெற்றோர்-இளைஞர் உறவில் விரிசல்
• சமவயதுக் குழுக்களின் ஆதிக்கம்
• கையடக்கத் தொலைபேசிப் பாவனை
• காதல் விவகாரமும் தகாத பாலியல் உறவும்
• சமூகச் சூழல் - பொருளாதாரம், சமூக ஒதுக்கம், கலாசாரம்
• குழந்தைப்பருவ, பிள்ளைப்பருவ அனுபவங்கள்
• ஆபாசமான திரைப்படங்கள்
• இன்டர்நெட்பாவனையும் ஈடுபாடும்
• சமூக ஊடகங்களின் தாக்கம்
இளைஞர்கள் எதிர்கொள்ளும் இன்றைய சவால்கள்:
• கொள்ளளவை விருத்தி செய்யாமை
• உளவியல்சார் நெருக்கடிகள்
• தொழில் சந்தைக்கு தயாரில்லாமை
• குடும்ப மட்டத்திலும் சமுக மட்டத்திலும் முறையான வழிகாட்டலின்மை.
• மது மற்றும் சட்டவிரோதப் போதைப் பொருள் புழக்கமும் பழக்கமும்
• ஆரோக்கியமான பொழுது போக்கு அம்சங்களின்மை.
இளைஞர் பருவத்தில் ஏற்படும் உளரீதியிலான மாற்றங்கள்:
இப்பருவத்தில் ஏற்படும் மாற்றங்களைப் பொதுவாக உடல், உளம், நடத்தை, உணர்வுகள் மற்றும் சமூக ரீதியிலான மாற்றங்கள் என வகைப்படுத்த முடியும். குறிப்பாக உளரீதியில் ஏற்படும் மாற்றங்களாக பின்வரும் சில முக்கிய விடயங்களைச் சுட்டிக்காட்ட முடியும்.
• இலட்சியவாத சிந்தனை, புரட்சிகர சிந்தனை உருவாகுதல்.
• தனது வகிபங்கு மற்றும் பாத்திரம் என்பனவற்றில் குழப்பமான நிலை ஏற்படல்.
• தனது அடையாளத்தை வெளிப்படுத்த முனைதல்.
• தன்னை யாரும் கட்டுப்படுத்த முடியாது தம்மால் எதையும் சாதிக்க முடியும் என்ற நினைப்பில் வாழ்தல்.
• பாலியல்சார் விடயங்களில் அதிக நாட்டம் கொள்ளல்.
• தங்கிவாழும் மனநிலை உருவாதல்
• காதல் வயப்படல்
• சொந்த அடையாளத்தைக் கைவிட்டு போலச் செய்தல் (சினமா நட்சத்திரம், விளையாட்டு வீரர்களைப் பின்பற்றுதல்)
• அடிக்கடி கோபப்படல்
• வாதாட்டம் செய்தல்
• சகபாடிகளுடன் கூட்டாகச் சேர்ந்து செயற்படல்
• சட்டம், ஒழுங்குகளை மீறுதல்
• ஏனையோரை தொந்தரவு செய்தல், கோபமூட்டல்
இளைஞர்களில் ஏற்படும் உளரீதியிலான பிரச்சினைகள்:
இன்று இளைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் மிக முக்கியமானதொன்றாக, அவர்களது உளநலத்துடன் தொடர்பான பிரச்சினைகள் காணப்படுகின்றன. உலகில் ஏற்படும் உளப்பிரச்சினைகளில், உளநோய்களில் அரைவாசிக்கு மேற்பட்டவைகள், 14 வயதிலிருந்தே உருவாகுவதாகவும், அவற்றில் அனேகமானவற்றை தடுக்கவும் தீர்க்கவும் முடியாமல் போவதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் கூறுகின்றது.
மேலும் தற்காலத்தில் 15 தொடக்கம் 29 வயதிற்கு உற்பட்டவர்களின் மரணமானது மனச்சோர்வு மற்றும் தற்கொலை மூலம் நிகழ்வதாக அந்நிறுவனம் குறிப்பிடுகின்றது. அந்தவகையில், பின்வரும் சில உளப்பிரச்சினைகள் இளையோரில் இன்று காணப்படுகின்றது.
1. மன அழுத்தம் - மனச்சோர்வு
2. அச்சம் அல்லது பயம்
3. பதட்டம் (Tension)
4. குழப்பமான மனநிலை (Confusion)
5. SMART PHONE பாவனையில் பித்து நிலை (Mania).
இளைஞர்கள் தங்களது உளநலத்தை பேணிக் கொள்வதற்கான சில ஆலோசனைகள்:
• கொள்ளளவு விருத்தி (Capacity development):
இன்றைய சவால்மிகுந்த, போட்டியான உலகில் இளைஞர்கள் தங்களது கொள்ளளவினை வளர்ப்பதில் கவனம் செலுத்துதல் வேண்டும். தனது கொள்ளளவினை வளர்த்துக்கொள்ளாத அல்லது குறைவாகக் கொண்டவர்களே, அனேகமான உளப்பிரச்சினைகளில் மூழ்கிக் கொள்வர்.
அந்தவகையில், அறிவு, திறன் மற்றும் மனப்பாங்கு ஆகிய விடயங்களை விருத்தி செய்துகொள்ள முயற்சித்தல் வேண்டும். குறிப்பாக திறன்களை வளர்ப்பதில் தங்களைச் சூழவுள்ள வாய்ப்புக்களையும் வசதிகளையும் பயன்படுத்திக் கொள்ளல் வேண்டும்.
ஒரு மனிதன் தன்னில் வளர்த்துக்கொள்ளவேண்டிய மிக முக்கியமான 10 வாழ்வியல் திறன்களை உலக சுகாதார ஸ்தாபனம் வரையறுத்துள்ளது.
1. தன்னை பிறர் நிலையில் வைத்துப் பார்க்கும் நிலை (Empathy).
1. 2. பிரச்சனைகளைச் சமாளிக்கும் திறன்.(Problem Solving)
2. 3. உறவு முறையை வலுப்படுத்தும் திறன். Interpersonal Relationship)
3. 4. படைப்பாற்றல் திறன்.(Creative Thinking)
5. கூர்சிந்தனைத் திறன்.(Critical Thinking)
4. 6. மன அழுத்தை எதிர்கொள்ளும் திறன்.(Coping with Stress)
5. 7. உணர்வுகளைக் கையாளும் திறன். (Managing Feelings)
8. தன்னை அறிதல் (Awareness)9. முடிவெடுக்கும் திறன். (Decision Making)
6. 10. தகவல் தொடர்பு திறன். (Effective Communication Skills)
• மனவெழுச்சிகளைக் கையாழ்தல் (Handling Emotions):

இளைஞர் பருவத்தில் உணர்வுகள் மற்றும் மனவெழுச்சிகள் என்பன புயலாக தோன்றும் பருவமாகக் காணப்படும். இவ்வாறான உணர்வுகளையும் மனவெழுச்சிகளையும் ஆரோக்கியமான முறையில் முகாமை செய்கின்ற, அறிவார்ந்த ரீதியில் கையாழ்கின்ற (Emotional Intelligence) பயிற்சிகளை தன்னில் வளர்த்துக்கொள்ளல் வேண்டும்.
இவ்வாறான பயிற்சிகளை வளர்க்காதபோது, அதற்கு அடிமைப்பட்டு, தன்னை மனம்போன போக்கில் நடத்துகின்ற நிலைமை ஏற்படுவதுடன், பல்வேறு வேண்டத்தகாத விளைவுகளையும் விபரீதங்களையும் உளப் பிறழ்வுகளையும் அவர்களது வாழ்வில் ஏற்படுத்தும்.
• மன அழுத்தத்தை முகாமை செய்தல் (Managing Stress):
இளைஞர்கள் எதிர்கொள்ளும் ஏமாற்றம், பழிவாங்கல்கள், விரக்தி, பிரிவுகள், துன்பதுயரங்கள், நெருக்கடிகள், நிம்மதியற்ற வாழ்க்கை, கசப்பான அனுபவங்கள், தோல்விகள் போன்றன மன அழுத்தத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக மனச்சோர்வும் ஏற்படும். இம்மனச்சோர்வினை ஒருவரது சிந்தனை, எண்ணம், நடத்தை என்பனவற்றிலேற்படும் பிறழ்வான மாற்றங்களிலிருந்து வெளிப்படுத்தல்களிலிருந்து புரிந்துகொள்ளமுடியும்.
எனவே, அடிப்படையில் ஒரு இளைஞர் தனது வாழ்வில் ஏற்படும் மன அழுத்தத்தை முகாமை செய்யக் கற்றுக்கொள்ளல் வேண்டும். அந்தவகையில், தனது பலம், பலவீனம் என்பனவற்றை அறிந்து, தன்னை ஒழுங்குபடுத்திக் கொள்ளல், நேரத்தை முகாமை செய்தல், வாழ்வில் குடும்பம், தொழில் மற்றும் சமூக தொடர்பான அலுவல்களில் ஈடுபாடுகளில் சமனிலை பேணுதல், முறையான ஆளிடைத் தொடர்புகளை வளர்த்தல், சாந்தப் பயிற்சிகளை நாளாந்தம் செய்தல், மன நிலைத்தன்மையைக் கட்டியெழுப்புதல் போன்றவற்றில் இளைஞர்கள் கவனம் செலுத்துதல் வேண்டும்.
அத்தோடு, உள நோய்கள் மற்றும் பிரச்சினைகள், அதன் தன்மைகள் இயல்புகள், அதற்கான அறிகுறிகள், அவற்றைத் தடுப்பதற்கான அல்லது சமாளிப்பதற்கான வழிமுறைகள் பற்றிய தெளிவான விழிப்புணர்வு பற்றி முன்கூட்டியே இளைஞர்கள் விளக்கம் பெற்றிருத்தல் வேண்டும்.
• சவால்;களுக்கு முகங்கொடுத்தல் (Facing to challenges):
தற்காலத்தில் இளைஞர்கள் எதிர்கொள்ளும் ஏறாழமான சவால்களில், குறிப்பாக மேலே சுட்டிக்காட்டியவற்றிலிருந்து ஸ்மார்ட் போன் பாவனையில் மூழ்குதல், சமூக ஊடகப் பாவனைக்கு அடிமையாதல், காதல், போதைவஷ்த்துப் பாவனை ஆகிய சீரியசான விடயங்களில் மிக அவதானமாகவும் விழிப்பாகவும் இருப்பதுடன், அவற்றிலிருந்து விலகி வாழ்வதற்கான, அவைகளை எதிர்கொள்வதற்கான மனநிலையை தன்னில் வளர்த்துக் கொள்ளல் வேண்டும்.
· • நல்ல சகபாடிகள் உறவை வளர்த்தல் (Well peer group relationship):
இளைஞர்கள் தனது வாழ்வில் கொண்டுள்ள குறிக்கோள்களை அடையும் வகையிலும் தன்னை சிறந்த வழியில் நடாத்தக்கூடிய விதத்திலும் உதவக்கூடிய சக நண்பர்களுடன் உறவினைப் பேணுவதுடன், தான் தவறு செய்யும் பட்சத்தில் தன்னை சுட்டிக்காட்டி நல்வழிப்படுத்தக்கூடிய நண்பர்களுடன் சிறந்த உறவினைத் தொடராகப் பேணவும் வேண்டும்.
· • சமூகக் கடமைகளில் ஈடுபடுதல் (Involve with Social Responsibility):
இளைஞர் பருவத்தில் தோன்றுகின்ற மிக முக்கியமான உணர்வுகளில் ஒன்றுதான், சமூகப் பணிகளில் அல்லது கடமைகளில் ஈடுபடுதல் வேண்டும் என்கின்ற உந்துதலாகும். தேவையற்ற விடயங்களையும் பிரச்சினைகளையும் தொல்லைகளையும் விட்டுவிட்டு, தனது பருவத்தில் தனது சக்திக்கும் கொள்ளவிற்கும் உட்பட்ட வகையில், சமூக விழுமியங்களை மதித்து, இத்தேசத்திலுள்ள வளங்களையும் வாய்ப்புக்களையும் பிரயோகித்து, சமூகம் மற்றும் இத்தேசம் எதிர்பார்க்கின்ற சேவைகளையும் அதேபோன்று பிரச்சினைகளுக்கான தீர்வுகளையும் அமுல்படுத்துகின்ற பொறுப்புள்ள இளைஞர்களாக மாறுவதற்கு இளையோர்கள் தன்னை தயார்படுத்தல் வேண்டும்.
அப்போதுதான், அவ்வாறான பணிகளில் ஈடுபடும் இளையோரால் சமூகம் வளமும் பலமும் பெறுவதுடன், சமூக அங்கீகாரமும் அவ்விளைஞர்களுக்கு கிடைக்கப்பெறும்.
· • ஆன்மீகக் கடமைகளில் ஈடுபடுதல் (Involve in the Spiritual):
இளைஞர் பருவத்தில் ஏற்படும் கோளாறுகளையும் பிறழ்வுகளையும் எதிர்கொண்டு, அதனை ஒரு ஆரோக்கியமான முறையில் பக்குவப்படுத்துகின்ற வழிப்படுத்துகின்ற சக்தி ஆன்மீகத்திற்கு உண்டு. அந்தவகையில், சமயங்கள் போதிக்கின்ற ஆன்மீகக் கடமைகளில், வழிபாடுகளில் இளைஞர்கள் தங்களை முற்றாக ஈடுபடுத்தி தங்களை வளப்படுத்திக் கொள்ள வேண்டும். இன்று ஆன்மீகத்தை விட்டும் தூரமான, ஆன்மீக வறுமையுடன் வாழுகின்ற இளைஞர்களே உள நோய்களுடன் காணப்படுகின்றனர்.
ஒரு மனிதனுடைய உள்ளத்தை வளப்படுத்துவதிலும், அதன் நோய்களைக் குணப்படுத்துவதிலும், அதில் அமைதியை ஏற்படுத்துவதிலும் ஆன்மீகத்திற்கு நிகரானதொன்று கிடையவே கிடையாது.

எனவே, மாறிக்கொண்டு செல்கின்ற இன்றைய உலகில், சமூகத்தின் முதுகெலும்பாகவுள்ள இளஞ்சமுதாயத்தை, அது எதிர்கொள்கின்ற சவால்கள் மற்றும் பிரச்சினைகளிலிருந்து பாதுகாத்து, உள ஆரோக்கிமுள்ள நல்ல வளமான சமூகமாக உருவாக்கி எடுக்கவேண்டிய தார்மீகப் பொறுப்பு, நாட்டின் அரசிற்கும் நாட்டிலுள்ள நிறுவனங்களிற்கும் சிவிலமைப்புகளுக்கும் சமூகத்தலைமைகளுக்கும் உண்டு. அந்தக் கடமையினையும் பொறுப்பினையும் செய்வதற்கு இத்தினத்தில் தயாராகுவோம். அந்தக்கடமையை நாம் செய்யத்தவறினால், சமூகமானது ஒரு ஊனமுற்ற, நலிவடைந்த சமூகமாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.