புகைத்தல் பாவனையால் நாளொன்றுக்கு அறுபதுபேர் மரணிக்கின்றனர்.

எச்.எம்.எம்.பர்ஸான்-

புகைத்தல் பாவனையால் மட்டும் ஒரு நாளைக்கு இலங்கையில் அறுபது பேர் மரணிக்கின்றார்கள் என்று ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எஸ்.எச்.இம்தியாஸ் தெரிவித்தார்.

வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற போதைப்பொருள் பாவனை தொடர்பான விசேட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் அங்கு தொடர்ந்தும் பேசுகையில்,

இன்று புகைத்தல் பாவனைகள் சர்வசாதாரணமாக ஒவ்வொரு வீட்டிலும் இடம்பெறுவதை நாம் காணக்கூடியதாகவுள்ளது ஒரு வீட்டில் ஒருவர் புகைக்கின்றார் என்றால் அவர் வெளியிடும் புகையினால் புகைக்காதவர்களும், சிறுகுழந்தைகளும் பெரிதும் பாதிப்படைகின்றார்கள்.

இப் புகைப்பழக்கத்தினால் ஒருநாளைக்கு அறுபதுபேர் மரணிக்கின்றாகள் என்றால் வருடமொன்றுக்கு இருபத்திரெண்டாயிரம் பேர் மரணிக்கின்றார்கள் ஆனால் மதுசாரம் பாவிப்பதனால் வருடத்தில் பத்தாயிரம் பேர் மரணிக்கின்றார்கள் மொத்தமாக இவ் போதைப் பாவனையால் முப்பத்திரெண்டாயிரம் உயிர்கள் நமது நாட்டில் ஒருவருடத்திற்கு இழக்கப்படுகின்றது.

எனவே இவ் போதைப் பாவனை காரணமாக மாரடைப்பு, புற்றுநோய், நுரையீரல் பாதிப்பு, நீரிழிவு போன்ற கொடிய நோய்களை நாங்களாகவே தேடிக் கொள்கின்றோம். அதுமட்டுமல்ல சமுகத்தில் நாங்கள் இந்த பழக்கத்தினால் கெட்ட பெயர்களையும் எடுத்துக் கொள்கின்றோம்.

எனவே இவ்வாறான போதைப் பாவனையாளர்களுக்கு நாங்கள் உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் இதன் விபரீதங்களை எடுத்துக்கூறி போதையற்ற செழிப்பான சூழலை உருவாக்க நாம் அனைவரும் முயற்சி எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -