பொத்துவில் கனகர்கிராம விவகாரம் மனிதஉரிமைகள் ஆணைக்குழுவில்..



25ஆம் திகதி விசாரணை : அரசஅதிபருக்கும் அழைப்பு!
காரைதீவு நிருபர் சகா-
பொத்துவில் கனகர் கிராமமக்களின் மண்மீட்புப் போராட்டம் புதுவடிவம்பெற்றுள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அந்த மக்கள் முறைப்பாடொன்றைப் பதிவுசெய்துள்ளனர்.

ஆணைக்குழுவின் கல்முனைப்பிராந்திய இணைப்பாளர் லத்தீப்இஸதீனிடம் அந்த மக்கள் முறைப்பாட்டை எழுத்துமூலம் கையளித்துள்ளனர்..

1990 களில் நிலவிய யுத்தசூழலினால் தாம் இடம்பெயர நேரிட்டதால் மீண்டும் 2009இல் மீளக்குடியேற சென்றபோது வனவளஅதிகாரிகளால் தடுக்கப்பட்டது.
இதுதொடர்பாக தாம் 13.03.2015இல் அம்பாறை அரசாங்க அதிபரிடம் முறையிட்டிருந்தோம். ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை.

தற்போது கடந்த 13.08.2018முதல் 65தினங்களாக சாத்வீகப்போராட்டத்திலீடுபட்டுவருகின்றோம். எனவே எமது நிலத்தினை மீட்டுத்தரவேண்டும் எனக் கோரியுள்ளனர்.

111 பேர் ஒப்பமிட்டு ஒப்படைக்கப்பட்ட இம்முறைப்பாட்டின் பிரகாரம் எதிர்வரும் 25ஆம் திகதி விசாரணை நடைபெறவிருப்பதாகவும் அதற்கு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் பொத்துவில் பிரதேசசெயலாளர் வனவள அம்பாறை அதிகாரி மற்றும் மக்கள் அழைக்கப்பட்டுள்ளதாக இணைப்பாளர் இஸதீன்லத்தீப் தெரிவித்தார்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -