கொழும்பில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது- மைத்திரியின் அதிரடி நடவடிக்கை


கொழும்பில் அமைந்துள்ள முக்கிய பிரபுகளின் வீடுகளுக்கு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் பாதுகாப்பிற்கு இலங்கை இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு, பெஜட் வீதியில் அமைந்துள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு விமான படையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
கடற்படையினர் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு பாதுகாப்பிற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
ரணில் விக்ரமசிங்கவின் வீடு மற்றும் அலரி மாளிகையின் பாதுகாப்பிற்கு பொலிஸ் விசேட அதிரடைப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நாட்டின் நிறைவேற்று ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சராக செயற்படுகின்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுக்கு அமைய செயற்படுவதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
நெருக்கடியான நிலை ஏற்பட்டால் நாட்டில் அனைத்து முகாம்களிலும் உள்ள இராணுவத்தினர் தயார் நிலையில் உள்ளதாக இராணுவத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -