மூன்று நாள் தலைமைத்துவப் பயிற்சி



க்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் சந்திரசோம சரணலால் அவர்களின் நிதியொதுக்கீட்டில் இளைஞர் யுவதிகளுக்கான 3 நாள் தலைமைத்துவப் பயிற்சி நிகழ்வொன்று பஸ்யாலை, எல்லக்கல மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

ஒக்டோபர் 19, 20, 21 ஆகிய தினங்களில் நடைபெற்ற இந்நிகழ்வு அத்தனகல்ல பிரதேச இளைஞர் கழகம் ஏற்பாட்டுடனும் இளைஞர் விவகார அமைச்சு மற்றும் இளைஞர் சேவைகள் மன்றத்தின் பங்களிப்புக்களுடனும் நடைபெற்றது.

நிகழ்வில் அத்தனகல்ல பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்த இளைஞர், யுவதிகள் பங்குபற்றியிருந்தனர். அவர்கள் 5 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு பல நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் நடாத்தப்பட்டதுடன் அனைவருக்கும் பெறுமதியான சான்றிதழ்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -