கூட்டு ஒப்பந்த விவகாரம் - முதலாளிமார் சம்மேளனத்திற்கு அழுத்தம் கொடுத்து பொறஸ்கிறிக் தோட்ட மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

க.கிஷாந்தன்-

தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் தொழிற்சங்கங்கள் முதலாளிமார் சம்மேளனத்திற்கு அடிமையாகி போய்விடக் கூடாது என தெரிவிக்கும் கொட்டகலை பொறஸ்கிறிக் தோட்ட தொழிலாளர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுப்படுகின்ற தொழிற்சங்கங்களுக்கு ஆதரவாக நாம் இருப்போம் என்றும் ஆயிரம் ரூபா சம்பளத்தை காலம் தாழ்த்தாமல் பெற்றுக் கொடுக்க அதற்கான சக்தியை தொழிற்சங்கங்களுக்கு வழங்குவோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

கொட்டகலை பொறஸ்கிறிக் தோட்டத்தின் கொழுந்து மடுவத்தில் 11.10.2018 அன்று காலை கூடிய அத்தோட்ட தொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றிலும் ஈடுப்பட்டனர்.

சம்பள உயர்வு கோரிக்கைக்காக முன்னெடுக்கப்பட்ட இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் சம்பள உயர்வை வழியுறுத்திய கோஷங்களை எழுப்பி பதாதைகளை ஏந்தியவண்ணம் இந்த போராட்டத்தில் சுமார் 300 தொழிலாளர்கள் ஒரு மணி நேரம் ஈடுப்பட்டனர்.

கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக தொழிற்சங்கங்கள் ஆயிரம் ரூபாவை அடிப்படை சம்பளமாக வழங்க வேண்டும் என முதலாளிமார் சம்மேளத்திற்கு அறிவித்திருக்கும் நிலையில் 15 வீத சம்பள உயர்வை தருவதாக முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்துள்ளமை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மதிக்காத நிலையாக தாம் உணர்வதாகவும், தொழிலாளர்கள் கோஷமிட்டனர்.

பண்டிகை காலம் வரும் இந்த நிலையில் நாட்டில் ஏற்றம் பெற்றுள்ள அத்தியவசிய பொருட்களின் விலையை உணர்ந்தும் தொழிலாளர்களின் குடும்பங்களின் இன்றைய வாழ்வாதாரத்தை உணர்ந்தும் தொழிற்சங்கள் முன்வைத்திருக்கும் ஆயிரம் ரூபா சம்பள உயர்வை முதலாளிமார் சம்மேளனம் வழங்க முன்வர வேணடும் என கோரிக்கையும் முன்வைத்துள்ளனர்.

இச்சம்பள உயர்வை பெற்றுத் தர நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்களும் முதலாளிமார் சம்மேளனத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என தெரிவிக்கும் இந்த தொழிலாளர்கள் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையில் நல்ல தீர்வினை பெற்றுத்தர வேண்டும் எனவும், பேச்சுவார்த்தயைில் ஈடுப்பட்டுள்ள தொழிற்சங்கங்களுக்கு பூரண ஆதரவை வழங்குவதாகவும், முதலாளிமார் சம்மேளனத்திற்கு அடிமையாகாமல் காலம் தாழ்த்தப்படாத நிலையில் சம்பள உயர்வை பெற்றுத்தர வேண்டும் எனவும் உருக்கமான கோரிக்கையை முன்வைத்தனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -