ஜோன்ஸட் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கில் சாட்சியங்கள் ஒன்றுகொன்று முரண்..


முன்னாள் அமைச்சர் ஜோன்ஸடன்பெர்னாண்டோவின் கைது விவகாரம் ஒருஅரசியல் பழிவாங்கள் என்பது தற்போது வெட்டவெளிச்சமாகியுள்ளதாக ஹம்பாந்தோட்டைமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்‌ஷ குறிப்பிட்டார்.
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் நலம் விசாரிக்ககேகாலை சிறைச்சாலைக்கு சென்ற அவர் அங்குஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில்இதனை குறிப்பிட்டார்.

அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோமீது நிதி முறைகேடு வழக்கு பதிவு செய்துள்ளபொலிஸார் முதலில் அவருக்கு எதிராக 5.3மில்லியன் நிதி மோசடி செய்துள்ளார் எனகுறிப்பிட்டனர்.பின்னர் அது 3.8 மில்லியனாக குறைந்தது பின்னர் அதிலும் சுமார் 1.3மில்லியனாக குறைந்துள்ளது.தற்போது வழக்குவிசாரணைகளில் சாட்சியங்கள் ஒன்றுக்கொன்றுமுரணாக உள்ளதாக விசாரணைகளின் பின்னர்நீதிமன்றில் தெளிவாகியுள்ளது.
மேலும் கடந்த வாரம் முன்னாள் அமைச்சர்ஜோன்ஸ்டனை சிறையில் அடைப்பது தொடர்பில்நீதி மோசடி பிரிவினர் உரையாடியதாககூறப்படும் ஒலிப்பதிவுகள் சமூக வலைகளில்வெளியாகியிருந்தது. இது தொடர்பில் நாம்பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடுசெய்துள்ளோம்.குறித்த ஒலிப்பதிவில் முன்னாள்அமைச்சர் ஜோன்ஸடன் ஏன்சிறைப்படுத்தப்பட்டார் என்பதற்கு தெளிவானஆதாரம் உள்ளது.
கூட்டு எதிரணி உறுப்பினர்களுக்காக மாத்திரம்நள்ளிரவு வரை திறந்திருக்கும் இந்த நாட்டுநீதிமன்றங்களில் சில அரசாங்கத்தின்முக்கியஸ்தர்களுக்கு ஓரிரு மணித்தியாளங்களில்பிணை கிடைக்கிறது.
மத்திய வங்கியை கொள்ளையிட்ட பிரதானிகள் இன்று சுதந்திரமாக உள்ளபோது கூட்டு எதிரணிமுக்கியஸ்தர்களுக்கு எதிராக மாத்திரம்சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை முன்வைத்துசிறையில் அடைக்கிறார்கள்.
எத்தனை சிறைகளில் அடைத்தாலும் எமதுபயணத்தை தடுத்து நிறுத்த முடியாது என அவர்குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -