30 வருடங்களுக்கு பிறகு கல்முனை இளைஞர் விளையாட்டுக்கழகம் உதைப்பந்தாட்டத்தில் வரலாற்றுச் சாதனை வெற்றி



எஸ்.அஷ்ரப்கான்-
ல்முனை இளைஞர் விளையாட்டுக் கழகம் இணை சம்பியனாகத் தெரிவாகி தங்கப் பதக்கத்தை பெற்றுச் சாதனை நிலைநாட்டியது.
மாத்தறை விளையாட்டு மைதானத்தில் பதுளை இளைஞர் விளையாட்டுக் கழகத்தினரை எதிர்த்து கடந்த (26-10-2018) நடைபெற்ற 30வது தேசிய இளைஞர் உதைப்பந்தாட்ட இறுதிப்போட்டி நடைபெற்றது.
நாடாளாவிய ரீதியில் அனைத்து மாவட்டங்களிலும்பிரதிநிதிதுவப்படுத்தி 18 கழகங்கள் போட்டியிட்டன. இதில் கல்முனை இளைஞர் விளையாட்டுக்கழகத்தினர் இறுதிப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சகல போட்டிகளிலும் விளையாடுவதற்கு உரிய பயிற்சிகளையும் உதவி மற்றும் ஆலோசனைகளையும் கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியர் ஏ.எம். அப்றாஜ் றிழா மற்றும் குறித்த கல்முனை இளைஞர் கழகத்தின் தலைவர் எம்.ஏ.எம்.றியால் ஆகியோர் மேற்கொண்டு இந்த வரலாற்றுச் சாதனைக்கு வித்திட்டிருந்தமை குறிப்பிடத் தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -