1000 ரூபா சம்பளம் வேண்டும் - மஸ்கெலியாவில் ஆர்ப்பாட்டம்

க.கிஷாந்தன்-
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம் கோரி மஸ்கெலியா மொக்கா மற்றும் காட்மோர் தோட்டத்தைச் சேர்ந்த சுமார் 500ற்கும் மேற்பட்ட தோட்ட தொழிலாளர்கள் 05.10.2018 அன்று காலை தோட்ட காரியாலயத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

கோஷங்களை எழுப்பியவாறு, பதாதைகளை ஏந்தியவண்ணம் இந்த ஆர்ப்பாட்டத்தை சுமார் ஒரு மணித்தியாலயம் வரை முன்னெடுத்தனர்.

தோட்ட தொழிலாளர்களை வழமைபோல் ஏமாற்றாமல் நியாயமான சம்பளத்தினை பெற்று தரவேண்டுமெனவும், கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாதிடுகின்ற தொழிற்சங்கங்கள் உரிய முறையில் பேச்சிவார்த்தையினை நடாத்தி ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளமாக பெற்று தரவேண்டுமெனவும் அவ்வாறு பெற்று தராவிடின் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட தயார் எனவும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தோட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்
ஏனைய துறையினர்களுக்கு சம்பளத்தை அதிகரித்து கொடுக்கும் இந்த அரசாங்கம் ஏன் தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் புறக்கணிப்பு செய்கின்றது என தொழிலாளர்கள் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினர்.
மலையகத்தில் உள்ள எல்லா அமைப்புகளும் ஒன்றிணைந்து தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை பெற்றுத்தர முன்வர வேண்டும் எனவும் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தமையும் குறிப்பிடதக்கது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -