வவுனியா மாவட்டத்தில் முதன்முறையாக Knowledge Box Media Academy நடாத்தும் ஒருநாள் ஊடக செயலமர்வு இம்மாதம் 15ம் திகதி சனிக்கிழமை காலை 09.00 மணிமுதல் மாலை 04.30 மணிவரை இடம்பெறவுள்ளது.
செய்தி மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சித்தயாரிப்பு, செய்தி வாசிப்பு மற்றும் கலையக அனுபவம், நவீன ஊடகங்கள் என்னும் தலைப்புகளில் இலங்கையின் தலைசிறந்த ஊடகவியலாளர்களால் விரிவுரைகள் நடாத்தப்படவுள்ளன.
அத்துடன் செயலமர்வில் செய்தி வாசிப்பதற்கான சந்தர்ப்பம், நிகழ்ச்சித்தயாரிப்பு, நிகழ்ச்சி தொகுப்பு உட்பட மொழிநடை, உச்சரிப்பு, புகைப்படக்கலை நுட்பங்கள், காணொளிகளை பதிவு செய்வதற்கான உத்திகளுடன் வாய்ப்புக்களும் வழங்கப்படவுள்ளன.
மேலும் ஊடகத்துறை சார் கற்கை நெறிகள் மற்றும் பட்டப்படிப்புக்கான வழிகாட்டல்கள் என்பனவற்றுடன் செயலமர்வில் கலந்துகொள்பவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.
மட்டுப்படுப்பத்தப்பட்ட ஆசனங்களே இருப்பதால் பதிவுகளுக்கும் மேலதிக தகவல்களுக்கும் தொடர்புகொள்ளுங்கள். – 0774828281 –
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -