கஹட்டோவிட்டவில் இடைநிறுத்தப்பட்ட நீர் விநியோகத்திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அமைச்சர் ரவூப் ஹக்கீம் உத்தரவு


ஐ. ஏ. காதிர் கான்-
ல வருடங்களுக்கு முன்னர் கம்பஹா மாவட்டத்தில், அத்தனகல்ல தேர்தல் தொகுதியிலுள்ள கஹட்டோவிட்ட கிராமத்தில் அல் - அக்ஸா (Al Aqsa) மற்றும் அல் - அமானா (Al Amana) ஆகிய நிறுவனங்களினால் ஆரம்பிக்கப்பட்டு இடைநிறுத்தப்பட்ட குடிநீர் வழங்கல் திட்டம், மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நகரத்திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் உத்தரவின் பேரில் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கான மதிப்பீடு ரூபா 2 300 000 ஆகும்.
சென்ற வாரம் தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்புச் சபையின் கடவத்தையிலுள்ள பிராந்திய காரியாலத்தில் இருந்து வந்த ஊழியர்கள் மதிப்பீடு மேற்கொண்டதுடன், கடந்த (05) புதன்கிழமை மீண்டும் வருகை தந்த ஊழியர்களால் ஆழ் கிணறு (Deep Well) தோண்டுவதற்கான இடம் இனங்காணப்பட்டு, அதற்கான அளவீடுகளும் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -