அரசியலுக்கு முஸ்லிம் காங்கிரஸ். பணம் சம்பாதிக்க மக்கள் காங்கிரசா ? மு.கா தலைவரிடம் கெஞ்சி மன்னிப்புக் கோரியவர் யார் ?


முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

ரசியல் செய்வதென்றால் கோடிக்கணக்கில் பணம் வேண்டும். பணம் இல்லாதுவிட்டால் தனக்கு கொடி பிடிப்பதற்கும், கூஜா தூக்குவதற்கும், போலி விசுவாசம் காட்டுவதற்கும் யாரும் இருக்கமாட்டார்கள் என்பது அரசியல்வாதிகளுக்கு தெரியும்.

மக்கள் மத்தியில் யார் என்று அடையாளம் தெரியாதவர்கள் பலர் முஸ்லிம் காங்கிரஸ் மூலமாக அரசியல் முகவரியை பெற்றுக்கொண்டார்கள். பின்பு தனது பரம்பரைக்கான சொத்துக்கள், அதிகாரப் பதவிகளை பெற்றுக்கொள்ள முதலீடாக கோடிக்கணக்கில் பணம் தேவைப்பட்டது.

மு.கா மூலமாக அவ்வாறு பணம் சம்பாதிப்பதற்கு முடியாத நிலைமை ஏற்பட்டபோது அமைச்சர் றிசாத்தின் தயவினை நாடினார்கள்.

அவ்வாறு கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் நோக்கோடு அமைச்சர் றிசாத்துடன் இணைந்தவர்கள் அதனை மக்களுக்கு நியாயப்படுத்துவதற்கு ஏதாவது காரணங்கள் தேவைப்பட்டது. அதற்காக மு.கா தலைவரை இலக்குவைத்து மிகவும் கேவலமாக விமர்சித்தார்கள்.

அதாவது தன்னை வளர்த்து ஆளாக்கி அரசியல் அந்தஸ்து வழங்கிய ஏணியையே எட்டி உதைத்தவர்கள், அமைச்சர் றிசாத்துக்கு மட்டும் எவ்வளவு காலங்களுக்கு விசுவாசமாக இருப்பார்கள் ?

தான் எதிர்பார்த்த பொருளாதார இலக்கினை அடைந்துகொன்டதன் பின்பு அரசியலில் தனது மக்கள் பிரதிநிதித்துவத்தினை பெற்றுக் கொள்வதற்காக மீண்டும் முஸ்லிம் காங்கிரஸ் தயவு தேவைப்படுகின்றது.

அவ்வாறு முஸ்லிம் காங்கிரசைவிட்டு சென்ற அரசியல்வாதி ஒருவர் அண்மையில் திடீரென தனியாக சென்று மு.கா தலைவரை சந்தித்து தன்னை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்ளுமாறு அழுது புலம்பியதுடன் மன்னிப்பும் கோரியிருக்கின்றார்.

இதற்காக ஏற்பாடுகளை செய்துகொடுத்த மு.கா இன் எடுபுடி ஒருவருக்கு ஒரு தொகை பணமும் அந்த அரசியல்வதியினால் வழங்கப்பட்டிருந்தது.

தலைவரோ இவரது வருகையை சற்றும் எதிர்பார்க்காததனால் ஆறுதல் வார்த்தையினை கூறி திருப்பி அனுப்பிவைத்துள்ளார். ஆனால் இவர் செய்த துரோகத்துக்கு இவரை நம்புவதற்கு தலைவர் தயாராக இல்லை.

இந்த அரசியல்வாதி எப்படிப்பட்டவர் ? தொடர்ந்து கட்சிக்கும் தலைமைக்கும் விசுவாசமாக இருப்பாரா என்பதுபற்றி அந்த எடுபுடிக்கு எந்தவித கவலையுமில்லை. தனது பொக்கட்டு நிரம்பினால் சரி என்பதுதான் அவரது எதிர்பார்ப்பு.
எனவேதான் மக்கள் மூலமாக தெரிவு செய்யப்படுகின்ற அதியுச்ச அரசியல் அதிகாரத்தினை பெற்றுக்கொள்வதற்கு முஸ்லிம் காங்கிரசை பாவிக்கின்ற இவர்கள், பணம் சம்பாதிப்பதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரசை பாவிக்கின்றார்கள். ஆனால் இவ்வாறானவர்கள் யாருக்கும் விசுவாசமானவர்களாக ஒருபொழுதும் இருக்கமாட்டார்கள். இவர்களின் இலக்கு இவர்களுடைய தனிப்பட்ட சுயநலனே தவிர, மக்கள் நலனோ, கட்சி நலனோ அல்ல.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -