நேற்று புனித மக்கா நகரில் இடம்பெற்ற ராபித்துள் ஆலமீன் அமைப்பின் மாநாட்டின் போதே அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் உயர்பீட உறுப்பினாக அமைப்பின் செயலாளர் நாயகம் கலாநிதி முஹம்மத் அப்துல் கரீம் அல் ஈஸா அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.
நாடுகளிடையேயான சமூக நல்லிணக்கம், கல்வி மேம்பாடு, சமய விவகாரங்கள் மற்றும் தேசிய பிரச்சினைகள் தொடர்ப்பிலும் பாரிய அக்கறை கொண்டு செயல்படும் ராபித்துல் ஆலமீன் அமைப்பு இலங்கையின் விவகாரங்களிலும் மிகப்பெரும் பங்களிப்பினை செய்து வருகின்றமை பாராட்டத்தக்கதாகும்.
இத்தகைய சந்தர்ப்பத்தில் இலங்கையை பிரதிநிதித்துவபடுத்தும் ஆற்றல் மிக்கதொரு மக்கள் சேவையாளரான அமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கு இந்த அதிகாரம் மிக்க பதவி கிடைத்தமை இலங்கை மக்களுக்கு கிடைத்த மிகப்பெரும் வரப்பிரசாதமாகும். இதனை அவர் சிறந்த முறையில் பயன்படுத்துவார் என்கிற அதீத நம்ம்பிக்கை எனக்கு இருக்கிறது.
எதிர்வரும் 5 வருட காலத்திற்க்குரிய இந்த பதவி மூலம் இலங்கை நாட்டுக்கு தேவையான உதவிகள் மற்றும் பல சேவைகள் பெறக்கூடிய வாய்ப்பு காணப்படுகிறது. குறிப்பாக இலங்கையின் கல்வி அபிவிருத்தி, பொருளாதார மேம்பாடு போன்ற விவகாரத்தில் விசேட கவனம் செலுத்த முடிவதோடு இலங்கைக்கும் சவுதிக்குமான இரு தரப்பு உறவு பலப்படுவதோடு இலங்கைக்கும் ஏனைய முஸ்லீம் நாடுகளுக்குமான உறவினையும் பலப்படுத்தக்கூடிய மிகப்பெரும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.
இதன் 43 ஆவது அமர்வு எதிர்வரும் ஒக்டோபர் 18 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இதன்போதே அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.