கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.ஆதம்பாவா மதனி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கைக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதுவர் அஹ்மத் அலி அல் முஅல்லா பிரதம அதிதியாகவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டை சேர்ந்த தொழிலதிபர் ஐயூப் அஸ்ஸர் ஊனி சிறப்பு அதிதியாகவும் கலந்து கொண்டனர்.
கலாநிதி எம்.எல்.முபாறக் மதனி பட்டமளிப்பு பிரசங்கத்தை நிகழ்த்தவுள்ளதுடன் இக்கல்லூரியில் ஐந்து வருட கால அல்-ஆலிம் கற்கை நெறியை சிறப்பாக பூர்த்தி செய்து, இறுதிப் பரீட்சைகளில் சித்தியடைந்த ஒன்பது மாணவிகளுக்கு இதன்போது மௌலவியா பட்டம் வழங்கப்பட்டது.
எம்.எம்.அப்ரோஸ் சித்தாரா, ஏ.எம்.பாத்திமா றுமானா, ஏ.பாத்திமா இம்னாஸ், ஏ.ஜீ.பாத்திமா சுமையா, இஸட்.ஏ.பாத்திமா சஸ்னாஸ், எஸ்.பாத்திமா மரீனா, எம்.ஐ.எப்.பஹ்மிதா ஸீனத், எச்.எப்.சல்பினா பேகம், ஏ.என்.பாத்திமா நதா ஆகியோரே தைபிய்யா எனும் மௌலவியா பட்டத்தை பெறவுள்ளனர். விழாவை முன்னிட்டு சிறப்பு மலர் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது..
கடந்த 2012ஆம் ஆண்டு தொடக்கம் தனியார் கட்டிடம் ஒன்றில் இயங்கி வருகின்ற இக்கல்லூரிக்கென சாய்ந்தமருது பொலிவேரியன் புதிய நகரில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தொழிலதிபர் ஐயூப் அஸ்ஸர் ஊனின் நிதியுதவியுடன் நிரந்தர கட்டிடத் தொகுதி அமைக்கப்பட்டுள்ளதாக கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.ஆதம்பாவா மதனி தெரிவித்தார்.