இவ்விழாவில் சிங்களத்தில் சிறப்புரையைப் பேராசிரியர் சந்திரசிறி பல்லியகுரு அவர்களும், தமிழில்திக்குவல்லை கமால் அவர்களும் நிகழ்த்தினார்கள்.
இவ்விழாவில் வாழ்நாள் சாதனைக்கான விருதுகளைப் பேராசிரியர் சோமரத்ன பாலசூரிய, காப்பிக்கோஜின்னாஹ் ஷெரீபுதீன், பேராசிரியர் கமனி ஜயசேகர ஆகியோர் பெற்றுக் கொண்டார்கள்.
2017 ஆம் ஆண்டு இலங்கையில் வெளிவந்த மும்மொழிகளிலும் வெளிவந்த பல்துறை சார்ந்த சிறந்த நூல்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
தமிழில் -
2017 ஆம் ஆண்டு இலங்கையில் வெளிவந்த தமிழ் நாவல்களில் சிறந்த நாவலாக
எஸ்.ஜோன்ராஜனின் ஒரு கிராமத்து அத்தியாயம். தெரிவு செய்யப்பட்டு ரூபா 100000.00 பணப்பரிசும் விருதும் சான்றிதழும் வழங்கப்பட்டது.
2017 ஆம் ஆண்டு இலங்கையில் வெளிவந்த தமிழ் சிறந்த சிறுகதைத் தொகுப்புகளில் சிறந்த சிறுகதைத் தொகுப்புகளாக இரண்டு சிறந்த சிறுகதைத் தொகுப்புகள் தெரிவு செய்யப்பட்டுப் பரிசு தொகைபகிர்ந்தளிக்கப்பட்டது.. அந்த வரிசையில்
பதுளை சேனாதிராஜாவின் உயிருதிர் காலத்தின் இசை. எனும் சிறுகதைத் தொகுப்பு தெரிவு செய்யப்பட்ட சிறந்த இரண்டு தொகுப்புகளில் ஒன்றாகத் தெரிவு செய்யப்பட்டு ரூபா 25000.00 பணப்பரிசும் விருதும் சான்றிதழும் வழங்கப்பட்டது.
தெரிவு செய்யப்பட்ட சிறந்த இரண்டு தொகுப்புகளில் அடுத்த தொகுப்பாக
ஏ.எஸ் உபைத்துல்லாவின் நிழலைத்தேடி தெரிவு செய்யப்பட்டு ரூபா 25000.00 பணப்பரிசும் விருதும் சான்றிதழும் வழங்கப்பட்டது.
2017 ஆம் ஆண்டு இலங்கையில் வெளிவந்த கவிதைத் தொகுப்புகளில் சிறந்த கவிதைத் தொகுப்பாகஜே.பிரோஸ்கானின் நாக்கு எனும் கவிதைத் தொகுப்பு தெரிவு செய்யப்பட்டு ரூபா 50000.00 பணப்பரிசும் விருதும் சான்றிதழும் வழங்கப்பட்டது.
அடுத்து 2017 ஆம் ஆண்டு இலங்கையில் வெளிவந்த கொடகே சாகித்திய விழா விருதுக்கு தெரிவுக்குஅனுப்ப்பட்ட நூல்களில் முதல் நூலை வெளியிட்ட வளர்ந்து வரும் எழுத்தாளரின் நூலுக்கான விருதும் சான்றிதழும் எஸ்.சிவசேகரனின் மட்டை வேலிக்குத் தாவும் மனசு எனும் கவிதை நூலுக்கு வழங்கப்பட்டது.