அகில இலங்கை வை.எம்.எம் ஏயினால் அண்மையில் நீதி அமைச்சில் சமர்ப்பிக்கப்பட்ட முஸ்லிம் விவகரத்துச் சட்ட திருத்தங்களின் இரண்டு அறிக்கைகளில் உள்ள முரண்பட்ட 12 சர்த்துக்கள் பற்றி இன்று(9)ஞயிற்றுக் கிழமை கொள்ளுப்பிட்டியில் உள்ள மரிண்டா ஹோட்டலில் முழு நாளாக முஸ்லிம் புத்திஜீவிகளுடன் கலந்துரையாடப்பட்டது. இந் நிகழ்வினை வை.எம்.எம். ஏ யின் நியமிக்கப்பட்ட குழு இக் கலந்துரையாடலை ஒழுங்கு செய்திருந்தது. . ஆரம்ப நிகழ்வினை ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.
இவ் இரு அறிக்கைகள் பற்றி கலந்துரையாடலுக்கு 125மேற்பட்ட முஸ்லீம் புத்திஜீவிகள் ந்து கொண்டு தத்தமது கருத்துக்களையும் ஆலோனையை முன்வைத்தனர், உலமாக்கள், முஸ்லிம் சட்டத்தரணிகள், முஸ்லிம் பெண்கள் அமைப்புக்களின் பிரநிதிகள், வை.எம்.எம்.யில் உள்ள சட்டத்தரணிகள் முஸ்லிம் காதி நீதிபதிகள், முஸ்லிம் பதிவாளர்களும் மௌலவியாக்கள், வைத்தியர் என பல புத்திஜீவிகளும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர் இக் கலந்துரையாடல்களில் முஸ்லிம் விவகாரத்துச் திருத்தச் சட்டத்தின் இரு அறிக்கைகளின் நன்மை தீமைகள் மற்றும் இஸ்லாமிய ஷரிஆ சட்டத்திற்கு மாறான அறிக்கைகளையும் கலந்துரையாடினார்கள். இறுதியில் சிரேஸ்ட சட்டத்தரணி ஜாவித் யுசுப், சட்டத்தரணி சாபிர் சவாட் ஆகியோர் முரன்பாடுகள் உள்ள இரு அறிக்கைகள் உள்ளவற்றின் இங்கு கலந்து கொண்டவர்கள் தெரிவித்த கருத்துக்களையும் கொண்ட அறிக்கை ஒன்றையும் நீதி அமைச்சுக்கு தெரிவிக்க உள்ளனர்.