சாய்ந்தமருது வைத்தியசாலை அபிவிருத்திச் சபை புதிய நிருவாகிகள் தெரிவு.

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை அபிவிருத்திச் சபை புனரமைப்பு கூட்டம் நேற்று இரவு 2018.08.10ம் திகதி வெள்ளிக்கிழமை வைத்தியசாலை பொறுப்பதிகாரி கரீமா சனுஸ் தலைமையில் வைத்தியசாலை வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பின்வருவோர் தெரிவு செய்யப்பட்டனர்.
தலைவர் -
மாவட்ட வைத்திய அதிகாரி கரீமா சனூஸ்
பிரதி தலைவர்கள் -
வைத்தியகலாநிதி சனூஸ் காரியப்பர்
எந்திரி. ஏ.எம்.ஸாஹிர்
ஏ.எம். அலியார் (கணக்காளர்)

பொதுச் செயலாளர் -
எம்.ஐ.எம்.சதாத்

பிரதி செயலாளர்கள் -
ஐ.எல்.ஏ.மஜீட்
எம்.எம்.உதுமாலெவ்வை
எம்.ஐ.சர்ஜூன்

பொருளாளர் -
ஏ.எல்.எம்.நியாஸ்
ஊடகச் செயலாளர்கள் -
எம்.ஐ.எம்.அஸ்ஹர்
யூ.கே.காலித்தீன்
ஜனூஸ் சம்சுதீன் ஆகியோர்கள் தெரிவு செய்யப்பட்டதுடன் சாய்ந்தமருது மாளிகைக்காடு பிரிவிலிருந்து தலா ஒருவர் வீதம் நிறைவேற்றுக் குழுவுக்கு தெரிவு செய்யப்பட்டனர்.
இன்னும் சில துறைசார் நிபுணர்களையும் உள்ளடங்கலாக புதிய நிருவாகிகள் ஒன்றிணைந்து செயற்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்போது நிகழ்வில் ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர்,
ஜம்மிய்யத்துல் உலமா சபைத் தலைவர், கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் உட்பட ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

இம்முறை ஒரு போதுமில்லாதவாறு இக்கூட்டத்திற்கு வருகை தந்திருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.








எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -