நுவரெலியாவில் பத்திரிகை விற்பனை நிலையத்தின் உரிமையாளர் சடலமாக மீட்பு



க.கிஷாந்தன்-
நுவரெலியா நகரிலுள்ள கார்கில்ஸ் கிரவுன்ட் பகுதியில் அமைந்துள்ள பத்திரிகை விற்பனை நிலையத்தின் உரிமையாளர், குறித்த நிலையத்திலிருந்து 24.08.2018 அன்று காலை சடலமாக மீட்கப்பட்டதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

58 வயதுடைய ஜீ.சுனில்சாந்த என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் அடையாளப்படுத்தியுள்ளனர்.

திருமணமாகாத இவர், குறித்த நிலையத்திலிலேயே தொடர்ந்து தங்குவதாகவும், 24.08.2018 அன்று காலை பத்திரிகையை விற்பனை செய்வதற்கு மேற்படி நிலையத்தை வழமைபோல் திறக்காததையடுத்து, பிரதேசவாசிகள் மற்றும் உறவினர்கள் பூட்டிருந்த கடையை உடைத்து பார்க்கும் பொழுது, இவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து நுவரெலியா பொலிஸாருக்கு இது தொடர்பாக தகவல் வழங்கியதன் பின், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

இவர் நோய்வாய்பட்டு உயிரிழந்தாரா அல்லது எவரேனும் கொலை செய்துள்ளார்களா என பொலிஸார் பல கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சடலம் தொடர்பாக நுவரெலியா மாவட்ட நீதவான் மரண விசாரணைகளை மேற்கொண்டதன் பின், பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என நுவரெலியா பொலிஸார் தெரிவித்ததோடு, மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -