எல்லை நிர்ணய அறிக்கை மீதான விவாதமும்வாக்கெடுப்பும் இன்று பாராளுமன்றில் இடம்பெறவுள்ளநிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
புதிய முறைமையில் மாகாண சபைத்தேர்தலைநடாத்துவதற்கான சட்டம் கடந்த ஆண்டு பாராளுமன்றத்தில்கொண்டுவரப்பட்ட போது அதற்கு எதிராக வாக்களித்த ஒரேஅணி கூட்டு எதிரணியாகும்.அரசினால் முன்வைக்கப்பட்டகுறித்த கலப்பு தேர்தல் முறையில் நடைமுறை சிக்கல்இருப்பதை நாம் அன்றே சுட்டிக்காட்டிஇருந்தோம்.அதேபோல சிறுபான்மை கட்சிகளுக்கும்அம்மக்களுக்கும் இது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும்நாம் அன்றே சுட்டிக்காட்டியிருந்தோம். அதனைபொருட்படுத்தாது சிறுபான்மை கட்சிகள் ஆதரவாக புதியதேர்தல் முறைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தன.
இந்த தேர்தல் முறையின் காரணமாக ஏற்படப்போகும்அபாயம் குறித்து ஏற்கனவே தாராளமாகபேசியாகிவிட்டது.அதே போல கடந்த உள்ளூராட்சி சபைதேர்தலில் நடைபெற்ற குளருபடிகளை நாம் நடைமுறையில்கண்டுகொண்டோம்.
இன்று நடைபெற உள்ள வாக்கெடுப்பில் நாம் எல்லைநிர்ணய அறிக்கைக்கு எதிராக வாக்களிக்க உள்ளோம்.
தம் தலைகளில் தாமே மண்ணை அள்ளி போட்டு விட்டுஇப்போது தவறு நடந்துவிட்டதாக கூறுவதில் எவ்வித பலனும்இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.