ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 'நுஜா நிலா முற்றம்' முழு இரவு ஊடகவியலாளர் ஒன்றுகூடல் கிழக்கின் சுற்றுலா மையம் பொத்துவில் கடற்கரை வெளியில் நாளை சனிக்கிழமை (25) இடம்பெறவுள்ளதாக தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் பைசல் இஸ்மாயில் தெரிவித்தார்.
தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தேசிய தவிசாளர் றியாத் ஏ. மஜீத்தின் ஒருங்கிணைப்பில் தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் சிரேஸ்ட ஊடகவியலாளர் எஸ்.எம்.அறூஸ் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இதில் கலை நிகழ்ச்சிகள், கவியரங்கு, ஊடகத்துறையில் ஊடகவியலாளர்களின் அனுபவங்களை பகிர்தல், கேள்வி பதில், நகைச்சுவை நிகழ்ச்சிகள் என பல்வேறு சுவார்சியமான நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளதாகவும், தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் உறுப்பினர்கள், உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.
