மீனவ சமூகத்தின் பிரச்சினைகளை பேசித் தீர்க்க அரசு முனைப்புடன் செயற்பட வேண்டும்

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ்-
ரு நாட்டில் ஜனநாயகத்தைப் பாதுகாத்தல், பிரஜைகளின் பொது நலனை விருத்தி செய்தல், சமூக நீதியை நிலைநாட்டுதல் என்பவற்றிற்கு மனித உரிமை என்பது அத்தியவசியமானது. இன்று இரண்டாம் பரம்பரை உரிமையான சமூக, பொருளாதார மற்றும் கலாசார உரிமைகளை மேம்படுத்த வேண்டியது அரசினது கடற்பாடாக இருக்கிறது. மீனவ சமூகத்தின் பிரச்சினைகளை பேசித் தீர்க்க அரசு முனைப்புடன் செயற்பட வேண்டுமென மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட சமூக, பொருளாதார மற்றும் கலாசார உரிமைகள் தொடர்பிலான செயலமர்வு இன்று (28.08.2018) மட்டக்களப்பு கடற்றொழில் நீரியல் வள திணைக்கள மண்டபத்தில் உதவிப் பணிப்பாளர் ருக்சான் குறூஸ் தலைமையில் அரச மற்றும்; மீன்பிடி சமூகத்தினரின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது. இதன் போது வளவாளராக கலந்து கொண்டு கருத்துரை வழங்கிய மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்
இன்று மட்டக்களப்பில் வாழும் மீனவர் சமூகம் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகி;ன்றனர். மீனவர்கள் சிரமத்திற்கு மத்தியில் பிடிக்கும் மீன்களுக்கு நியாயமான விலை சந்தையில் கிடைப்பதில்லை. இதற்குக் காரணம் வியாபாரிகள் குறைந்த விலையில் மீன்களை கொள்வனவு செய்து வருகின்றனர். மீன்களை வியாபாரிகளே ஏற்றுமதி செய்து வருகின்றனர். அத்துடன் தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களை பாவிப்பதால் பாரம்பரிய தொழிலினை செய்பவர்கள் பாதி;க்கப்படுகின்றனர். அத்துமீறி வெளிமாவட்ட மீனவர்கள் வருகை தந்து ஆதிக்கம் செலுத்துகின்றனா.; வாவி வளங்களை அழிப்பதால் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அண்மைக் காலமாக முதலைகளின் ஆதிக்கமும் பல இறப்புச் சம்பவங்களும் நடந்தேறி வருகின்றது. காப்புறுதித் திட்டங்களி;ன் அடிப்படையி;ல் உரிய காலத்தி;ற்குள் நட்டஈடு வழங்கப்படுவதி;ல்லை.

ஒவ்வொரு மனிதனும் சமூக, பொருளாதார மற்றும் கலாசார உரிமைகளையும் சட்டத்தையும் கற்றறிந்து கொள்வதோடு இதன் மதிப்பினை மேம்படுத்தி பாதுகாக்க வேண்டும். நாட்டின் அதியுயர் சட்டமாகிய அரசியல் அமைப்பினுள் அல்லது விசேட சட்டங்களைக் கொண்டு வந்து அவற்றினுள் மனித உரிமைகள் சாசனத்தில் உள்ள விடயங்களைக் உள்ளடக்கி சட்டமாக்குவதன் மூலமே உரிமைகளை நாம் சட்டரீதியாக பெற்றுக் கொள்ள முடியும்.
எமது நாட்டில் 1972ம்; ஆண்டில் கொண்டு வரப்பட்ட அரசியல் அமைப்பிலும் அதன் பின்னர் 1978ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசியல் அமைப்பிலும் அடிப்படை உரிமை என்ற வகையிலேயே உரிமைகள் அறிமுகம் செய்யப்பட்டு;ள்ளன. எனவே எல்லா மனித உரிமைகளும் அடிப்படை உரிமையல்ல, ஆனால் அடிப்படை உரிமைகள் எல்லாம் மனித உரிமைகளாகும். அரசியல் அமைப்பின் மூன்றாவது அத்தியாயத்தில் அடிப்படை உரிமைகள் பற்றி கூறப்பட்டு;ள்ளது. உத்தேச அரசியல் யாப்பு சீர்திருத்தத்திலும் இன்னும் பல அடிப்படை உரிமைகள் உள்ளீர்க்கப்படவிருக்கிறது.
அடிப்படை உரிமைகள் அனைத்தும் எம்மால் நினைத்தவாறு அனுபவிக்கக்கூடிய உரிமைகள் அல்ல. இந்த உரிமைகள் சில வரையறைக்குட்பட்டவையாகும். இதன் வரையறைகள் பற்றியே உறுப்புரை பதினைந்து கூறுகிறது.
அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் பொறுப்பு அரசியல் அமைப்பினால் அரச அதிகாரிகள் மீது சுமத்தப்பட்டு;ள்ளது எனவும் அஸீஸ் தெரிவித்தார். 





எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -