எம்.ஜே.எம்.சஜீத்-உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படும் திட்டத்தின் பொத்துவில் பிரதேசத்தின் பின் தங்கிய கிராமங்களை இணைப்பதற்கான நான்கு முக்கிய பாலங்களை நிர்மாணித்து தருமாறு உள்ளுராட்சி மாகாண சபைகள், விளையாட்டு துறை அமைச்சர் அல்-ஹாஜ். பைசர் முஸ்தபாவிடம் கிழக்கு மாகாண முன்னாள் வீதி அபிவிருத்தி அமைச்சரும், அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவருமான எம்.எஸ்.உதுமாலெப்பை வேண்டுகோள் விடுத்தனை அடுத்து உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சின் பொறியியலாளர் திரு.சச்சியானந்தன் தலைமையிலான குழுவினர் பொத்துவில் பிரதேசத்திற்கு வருகை தந்து பாலங்கள் நிர்மாணிக்கப்படவுள்ள இடங்களை பார்வையிட்டனர்.
பொத்துவில் அல்-ஹுதா கிராமத்தில் இருந்து ஆத்திமுனை, சர்வோதயபுற கிராமம், செங்காமம் கிராமங்களை இணைக்க கூடிய 02 பாலங்களும், கிராங்கோவ ஓடயாறு பாலம், புதுக்கண்ட கிணத்தடி வட்டைப்பாலம் என்பன இத்திட்டத்தில் நிர்மாணிக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் வீதி அபிவிருத்தி அமைச்சரும், அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, பொத்துவில் பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சீ.நஸீல், உள்ளுராட்சி தினைகளத்தின் பொறியியலாளர் திரு.சச்சியானந்தன் , பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் பிரதித் தவிசாளர் ஏ.எல்.பதுர்கான், பிரதேச சபையின் உறுப்பினர் ஜமாஹீன், பொத்துவில் கமநல சேவை நிலைய தலைவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் சித்தீக் மற்றும் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -