இலங்கை உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளனத்தின் பிரதேசசபைத் தலைவர்களின் ஒழுங்கமைப்பின் இவ்வருடத்திற்கான உபசெயலாளராக காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவுசெய்யப்பட்டார்.
கொழும்பு ஹொப்பேகடுவ விவசாய நிலையத்தில் நேற்றுமுன்தினம்(11) நடைபெற்ற பிரதேசசபைத்தவிசாளர்களின் முதலாவது மாநாட்டில் இத்தெரிவு இடம்பெற்றது.
பிரதமஅதிதியாக இனநல்லிணக்க மொழியுரிமைகள் பிரதியமைச்சர் அலிசாஹிர்மௌலானா கலந்து சிறப்பித்தார்.
இலங்கையிலுள்ள 320பிரதேசசபைகளின் தவிசாளர்களுக்கான இவ் ஒழுங்கமைப்புக்கூட்டத்தில் மூவின தவிசாளர்களும் கலந்துகொண்டனர்.
இத் தேசிய சபையின் உயர்மட்டக்குழுவில் இரு தமிழ் தவிசாளர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.உபசெயலாளராக காரைதீவுபிரதேசசபைத்தவிசாளர் கிரு.ஜெயசிறிலும் உபதலைவராக நோர்வூட் பிரதேசசபைத்தவிசாளர் கே.கே.ரவியும் ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டார்கள்.
இருவரும் முதற்றடவையாக தவிசாளராகத் தெரிவுசெய்யப்பட்டவர்களாவர் . வடக்கு கிழக்கிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட ஒரேயொரு தமிழ் தவிசாளர் கி.ஜெயசிறில் என்பது குறிப்பிடத்தக்கது.