நாடெங்கும் அபிவிருத்தி நாட்டு மக்கள் மனமகிழ்ச்சி


ஜெமீல் அகமட்-
லங்கை முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் மக்களை கவர்ந்த மக்கள் சேவகன் என்று இரண்டு பேர் என்று மக்கள் போற்றும் அரசியல்வாதிகளில் ஒன்று மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்கள் அடுத்தது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைலர் அமைச்சர் றிசாத் அவர்கள் இவர்கள் இரண்டு பேரும் இலங்கை அரசியல் வரலாற்றின் முஸ்லிம்களின் கதாநாயகன் என்று உலகமே கூறுகின்றது.
மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்களின் அரசியல் சொற்ப காலமாக இருந்தாலும் அவரது அரசியல் காலத்தில் முஸ்லிம் சமுதாயம் மற்றும் சகோதர இன மக்களும் பெரும் நன்மையடைந்து தலைவர் அஸ்ரப் அவர்களின் நற்பணி கொள்கைக்காக சகல இன மக்களும் அவரால் உருவாக்கபட்ட மக்கள் நலன் கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை ஆதரித்து வந்தனர்.

ஆனால் அவரின் மறைவுக்கு பின் நாம் கண்ணால் பார்க்காத உருவம் றவூப் ஹக்கிம் அவர்களுடைய நப்சி அதன் ஆசையை நிறைவேற்ற அதாவுல்லாஹ் ஹரீஸ் ஹசன் அலி பஷீர் சேகுதாவூத் ஆகியோர் மேற்கொண்ட போராட்டத்தின் மூலம் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமை பதவியை பெற்றுக்கொண்ட றவூப் ஹக்கிம் அவர்களின் அரசியல் என்பது மக்கள் நலன் கொண்டதாக இல்லை. 

அவரது அரசியல் வியாபாரம் போன்று அரசியல்வாதிகளாளும் மக்களாளும் அடையாம் கண்டு விட்டனர் அதனால் சிறுபான்மை மக்கள் மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்களின் அரசியலை நினைவுகூர்ந்து பார்த்த போது அவரின் கொள்கையில் நாட்டில் அரசியல் செய்யும் ஒரு அரசியல்வாதியாக அமைச்சர் றிசாத் அவர்களை அடையாளம் கண்டு மறைந்த தலைவருக்கு மக்கள் வழங்கிய ஆதரவை அமைச்சர் றிசாத் அவர்களுக்கு வழங்கி வருவதால் இன்று நல்லவன் கெட்டவன் இனவாதி என்று பலரும் பேசும் அரசியல்வாதியாக அமைச்சர் றிசாத் அவர்கள் இருக்கின்றார் என்பது குறிப்பிட்டதக்கது.
கடந்த 2015 ஆண்டுக்கு முதல் வட மாகாணத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் மீள்குடியேற்றத்துக்காக அரசியலில் போராடிய அமைச்சர் றிசாத் அவர்களுக்கு தனது தலைவர் அஸ்ரப் அவர்களுக்காக ஹக்கிமை ஆதரித்து ஏமாற்றம் அடைந்து, அரசியல் அனாதைகளாக வீதியில் நிற்கும் மக்களை மீட்க அந்த மக்களின் கோரிக்கைக்கு அமைய நாடு பூராக அரசியலை விஸ்தரித்து மக்களுக்கு சேவை செய்யும் நிலமை ஏற்பட்டது.

அதனால்தான் கடந்த பாராளுமன்ற தேர்தலில் கிழக்கில் காலடி வைத்த அமைச்சர் றிசாத் அவர்கள் மறைந்த தலைவரின் ஆதரவு மக்களின் வாக்குகள் பெற்று அம்பாறை மாவட்டத்தில் 33106 வாக்குகள் பெற்று சாதனை படைத்த அமைச்சர் றிசாத் அவர்கள் கடந்த உள்ளூராச்சி தேர்தலில் நாடு பூராக போட்டியிட்டு யாரும் எதிர்பார்க்காத மகத்தான வெற்றி பெற்றுள்ளார் அதிலும் அம்பாறை மாவட்டத்தில் ஒரு உறுப்பினராக இருந்த கட்சிக்கு 32 உறுப்பினர்கள் கிடைத்த வெற்றி அத்தோடு முஸ்லிம் காங்கிரஸின் கோட்டைகளில் மயிலின் ஆட்சி என்பது வரலாற்று சாதனையும் கிண்னஸ் புத்தகத்தில் பொறிக்கப்பட வேண்டிய அரசியல் சாதனையும் ஆகும்

இன்று நாடு பூராக உள்ள மக்கள் அரசியலில் அமைச்சர் றிசாத் அவர்களை நம்பி அவருக்கு தனது ஆதரவை தெரிவித்து வருவதால் தன்னை நம்பிய மக்களுக்கு கால நேரமின்றி ஜாதி பேதமின்றி கடந்த மாதம் முதல் இன்று வரை முல்லைத்தீவு யாழ்ப்பாணம் வவுனியா மன்னார் குருநாகல் பொலநறுவை அனுராதபுரம் அம்பாறை போன்ற மாவட்டங்களில் பல அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைத்து அந்த மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் அமைச்சர் அவர்கள் வசதி இல்லாத குடும்பங்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காக அவரே நேரில் கலந்துகொண்டு அந்த மக்களுக்கு வாழ்வாதார உதவிகளையும் வழங்கி வருகின்றார்.

இதனால் நாடெங்கும் அபிவிருத்தி நாட்டு மக்கள் மனமகிழ்ச்சியுடன் அமைச்சர் றிசாத் அவர்களின் மக்கள் நலன்கொண்ட சேவைகளை பாராட்டி பேசும் போது நாட்டின் ஜனாதிபதி பிரதமர் ஆகியோரும் அமைச்சர் றிசாத் அவர்கள் மக்கள் சேவகன் மக்களுக்காக அரசியல் செய்யும் செயல் வீரன் என்று மேடைகளில் பாராட்டி பேசியதை மக்கள் காதில் கேட்டனர்.

ஆனால் தற்போது அமைச்சர் றிசாத் அவர்கள் மக்களுக்காக செய்து வரும் மக்கள் பணியை பத்திரிகை வானொலி தொலைகாட்சி முகநூல் இனையதளம் போன்ற ஊடகங்கள் மூலம் அறிந்துகொண்ட அமைச்சரின் எதிரிகள் தங்களது அரசியல் மரணத்தை பாதுகாத்துக்கொள்ள திருமண வீடு மௌத்து வீடு எங்கே என்று தேடிச்சென்று மக்களுடன் சிரித்து பேசி அழுகும் நிலையை கண்டு மக்கள் சிரிக்கும் நிலையை அல்லாஹ் ஏற்படுத்தி விட்டான் அல்லாஹ் பெரியவன் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்
பாராளுமன்றத்தின் ஆயுள் காலம் குறுகிய காலமாகவுள்ளதால் மக்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்று பல அபிவிருத்தி வேலைகளை அமைச்சர் செய்து வரும் போது அதற்கு களங்கம் ஏற்படுத்தி மக்களை தன் பக்கம் எடுக்க வேண்டும் என்பதற்காக கடந்த வாரம் பொத்துவில் வீட்டுத்திட்டம் தரமற்ற கட்டிடம் என வங்குரோத்து அரசியல்வாதிகள் தங்களது கூலிப்படைகள் மூலம் ஆதாரம் அற்ற பொய் பிரச்சாரம் செய்து மூக்குடைந்து போய்யுள்ளனர்.

அது மட்டுமல்ல அம்பாறை மாவட்டத்தில் தொழில் இல்லாத இளைஞர்கள் யுவதிகளுக்கு தொழில் வழங்குவதற்காக சம்மாந்துறை மண்ணில் மாபெரும் தொழில் பேட்டையை அமைக்க அமைச்சர் றிசாத் பல வருடமாக முயற்சி செய்து வரும் போது தனது அரசியல் மரணித்து விடும் என்ற அச்சத்தில் தனது அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் தொழில் பேட்டை அமைப்பதை தடுத்து வருகின்றார். ஆனால் அவரின் தடையை அமைச்சர் றிசாத் அவர்களின் மக்கள் படை பாராளுமன்ற உறுப்பினர் V C இஸ்மாயில் தலைமையில் உடைத்து வீசும் போது அமைச்சர் றிசாத் யார் ? என்பதை மிகவும் தெளிவாக மன்சூர் அவர்கள் மிக விரைவில் புரிந்துகொள்வார்
அமைச்சர் றிசாத் அவர்கள் மக்களுக்கு சேவைகள் செய்யும் போது ஊழல் புரிந்து கொமிசன் வேண்டி குடும்பத்துடன் சொகுசா வாழ அரசியல் செய்பவர்கள் வைக்கோல் மேடையில் படுக்கும் மிருகம் போல் இருந்தாலும் அமைச்சர் றிசாத் அவர்களின் மக்கள் சேவையை அல்லாஹ்வை தவிர வேறு யாராலும் தடுத்து நிறுத்த முடியாது அதுபோல் அவரது அரசியல் வளர்ச்சியையும் இனி வீழ்த்த முடியாது என்பதை காழ்புணர்ச்சி கொண்ட வர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -