எல்லாப் புகழும் இறைவனுக்கே
ஒரு தள வைத்தியசாலைக்குரிய சகல கட்டிட வசதிகளையும் கொண்டிருந்த எமது வைத்தியசாலை கடந்த காலங்களில் நோயாளிகளின் நம்பிக்கையற்ற ஒரு இடமாக இடைக்காலத்தில் மாற்றம் பெற்றிருந்தது.
எல்லோராலும் எள்ளி நகையாடப்படுகின்ற ஒரு இடமாக மாற்றம்பெற்றிருந்தது. சாய்ந்தமருது வைத்தியசாலையை மூடவேண்டும் என்கின்ற மனோநிலையில் செயல்பட்டனர்.ஆனால் இன்று இந்நிலைமை மாற்றம் பெற்றுக்கொண்டு வருகின்றமையை இட்டு எல்லாம் வல்ல இறைவனுக்கு முதற்கண் நன்றிகளைத்தெரிவித்துக் கொள்கின்றேன்.
எமது வைத்தியசாலை கடந்த காலங்களில் நோயாளிகளைக் கவர்வதிலும், சிறந்த சிகிச்சையை வழங்குவதிலும் முன்னேறிவருவது எமக்கு மனமார்ந்த மகிழ்ச்சியை வழங்குகின்றது. எமது சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை கடந்த காலாண்டில்( ஏப்ரல் தொடக்கம்- ஜூன்) முக்கிய வெற்றியை நோயாளிகளின் வரவில் கல்முனை பிராந்திய சுகாதாதார பணிப்பாளர் பிரிவில் பிரதேச வைத்தியசாலைகள் மட்டத்தில் பதிவு செய்துள்ளது என்பதை மிக மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். அல்ஹம்துலில்லாஹ்.
இப்பதிவானது OPD,Addmission, ETU, சிறிய சத்திரசிச்சை,Diabatic clinic,ஆய்வுகூடம் போன்றனவற்றில் பதிவுசெய்துள்ளது. உதாரணமாக OPD இன் வரவுப் பதிவு 12820 இலிருந்து 16020 ஆகவும், ward அனுமதியானது 1102 இலிருந்து 1607 அதிகரித்துள்ளது. எனவே இதற்காக அயராது பாடுபட்ட, பட்டுக் கொண்டிருக்கும் DMO Dr. Sanus Kaariapper அவர்களுக்கும், மற்றும் ஏனைய வைத்தியர்கள், உத்தியோகஸ்த்தர்களுக்கும் இவ்வைத்தியசாலை அபிவிருத்திக் குழு சார்பாக நன்றிகளைத் தெரிவித்துகொள்கின்றேன்.
எனவே, இம்முன்னேற்றம் எமது அடுத்த இலக்கான இவ்வைத்தியசாலையினை A தர பிரதேச வைத்தியசாலையாக தரமுயர்த்துவதில் ஒரு உந்து சக்தியாகும். எனவே இவ்வளர்ச்சியை தொடர்ந்தும் பேண நாம் எல்லோரும் ஒன்றிணைத்து உழைக்க வேண்டுமென பணிவுடன் வேண்டிக்கொள்கின்றேன்.
பௌதீக அபிவிருத்தி என்பதை விட நோயாளிகளை சிறந்த முறையில் பராமரிப்பதற்கான உதவிகளை செய்வதிலையே அதன் முழுமையான வெற்றி தங்கியுள்ளது. இதற்கு நாம் எல்லோரும் ஒருமித்து உதவ முன்வரவேண்டும். அதே நேரம் மக்கள் மத்தியில் இத்தகவலை முடியுமான அளவு கொண்டு சென்று மேலும் வரவை அதிகரிக்க நாம் எல்லோரும் உதவ வேண்டும் என்கின்ற பணிவான கோரிக்கையினையும் சகல அமைப்புக்களுக்கும் முன்வக்கின்றேன்.
வஸ்ஸலாம்
செயலாளர்- சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை
வஸ்ஸலாம்
செயலாளர்- சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை