செயலாளராக றமீஸ் இரண்டாவது தடவையாகவும் தெரிவு

எம்.ஜே.எம்.சஜீத்-

பல்கலைக் கழகங்களின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தெ.கி.ப.க ழக செயலாளராக சலீம் றமீஸ் இரண்டாவது தடவையாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
லங்கை பல்கலைக் கழகங்களின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தென்கழக்குப் பல்கலைக்கழக செயலாளராக தொழில்நுட்ப பீடத்தின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் சலீம் றமீஸ் இரண்டாவது தடவையாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் கடமையாற்றும் தொழில்நுட்ப தரத்திலான உத்தியோகத்தர்களை உள்ளடக்கியதாக இயங்கிவரும் 'இலங்கை பல்கலைக் கழகங்களின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் சங்கத்தின்' 2018 ஆம் ஆண்டுக்கான வுருடாந்த ஒன்று கூடல் யாழ்ப்பாணம் கோப்பாயில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் தேசிய கல்விக் கல்லுரியில் அதன் தலைவர் திரு. மங்கள டி .தபரேரா தலைமையில் 25 ஆம் திகதி நடைபெற்றது.

இக் கூட்டத்தின்போது ஒவ்வொரு பல்கலைக்கழகங்களின் சார்பில் பல்கலைக் கழக செயலாளர்கள் தெரிவு இடம்பெற்றது. இதில் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் சார்பில் மீண்டும் இரண்டாவது தடவை செயலாளராக சலீம் றமீஸ் பிரேரிக்கப்பட்டு ஏகமானதாக தெரிவு செய்யப்பட்டார்.
தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் உப செயலாளரான இவர் சமாதான நீதவானாகவும், பல சமூக அமைப்புகளில் தலைவர்,செயலாளர் போன்ற பதவிகளை வகித்து வருகின்றார். அத்துடன் இவர் ஒரு சிரேஷ்ட ஊடகவியலாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த கூட்டத்தின் போது ஓய்வுபெற்றுச் சென்றுள்ள உத்தியோகத்தர்கள், திறமைகளை வெளிக்காட்டியவர்கள் கௌரவிக்கப்பட்டு நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -