பாக்கிஸ்தான் நாட்டின் 72 வது சுதந்திர தின வைபவம்

அஷ்ரப் ஏ சமத்-
பாக்கிஸ்தான் நாட்டின் 72 வது சுதந்திர தின வைபவம் கொழும்பில் உள்ள பாக்கிஸ்தான் உயா் ஸ்தாணிகா் அலுவலகத்தில் இன்று (14) ம் திகதி நடைபெற்றது. இந் நிகழ்வில் பதில் உயா் ஸ்தாணிகா் கடமையாற்றும் ஜனபாஸ் கான் அவா்கள் கொடியை ஏற்றி வைத்தாா். இந் நிகழ்வில் கொழும்பில் வாழும் பாக்கிஸ்தானிகா்கள் கலந்து சிறப்பித்தனா் அத்துடன் பாக்கிஸ்தான் ஜனாதிபதி மெஹாமூன் ஹசைன் அவா்களின் விசேட செய்தி வாசிக்கப்பட்டது.

இங்கு உரையாற்றிய பாக்கிஸ்த்தான் துாதுவா் -

இலங்கை சுதந்திரம் அடைந்த நாளில் இருந்து பாக்கிஸ்தான் இலங்கை நடபுரவை பேணி வருகின்றது. பாக்கிஸ்தான் இலங்கைக்கு பாதுகாப்பு, பொருளாதாரத் துறையில் பாரிய பங்களிப்பை இருநாடுகளுக்கிடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி அதனை செயல்படுத்தி வருகின்றது. அத்துடன் பாக்கிஸ்தான் இலங்கையின் சமுக மற்றும் அனா்த்தங்கள் ஏற்படும்போது அவ்வப்போது கைகொடுத்து வருகின்றது. அத்துடன் இவ் உறவின் ஓர் அங்கமாக பாக்கிஸ்தான் மிகப் பெறிய கப்பலொன்று கொழும்பு துறைமுகத்தில் நங்குரமிடப்பட்டுள்ளது. அதன் வைபவங்கள் இன்று இரவு கப்பலில் நடைபெறும் எனவும் அவா் உரையாற்றினாா்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -