திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் எதிர்வரும் 27ம் திகதி நடைபெறயிருந்த நிலையில் தவிர்க்க முடியாத காரணத்தினால் 29ம் திகதி நடைபெறும் என திருகோணமலை மாவட்ட திட்மிடல் பணிப்பாளர் கே.பரமேஸ்வரன் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் பல அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட விருக்கின்ற நிலையில் தவிர்க்க முடியாத காரணத்தினால் 27ம் திகதி காலை 9.30மணிக்கு நடைபெறவிருந்த ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் 29ம் திகதி காலை 10.00மணிக்கு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உரிய அதிகாரிகளுக்கு தபால் மூலம் இக்கடிதம் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் திட்டமிடல் பணிப்பாளர் கே.பரமேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.
