வியூகம் ஊடக வலையமைப்பின் ஏற்ப்பாட்டில் வியூகம் முகநூல் மூன்று வருட பூர்த்தியை முன்னிட்டு வியூகம் செய்தி இணையதள அங்குராப்பணம் நிகழ்வும்,குப்பை மனசு சமூக விழிப்புணர்வு குறும்பட வெளியிடும்
சனிக்கிழமை (28) மணிப்புலவர் மருதூர் ஏ.மஜீத் தலைமையில் சாய்ந்தமருது பிரதான வீதியில் அமைந்திருக்கும் பேர்ள்ஸ் மண்டபத்திற்கு இடம்பெற்றது .இவ் நிகழ்வில் பிரதம அதிதியாக இன நல்லுறவிக்கான தேசிய வேலைத்திட்டத்தின் தலைவர் அஸ்ஸெய்க் அப்துல் காதர் மசூர் மெளலானா அவர்களும் கெளரவ அதிதியாக அபிவிருத்தி உபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் மற்றும் இலங்கை மின்சார சபையின் கல்முனைக்காரியாலய பிரதான பொறியலாளர் எம்.ஆர்.பர்கான் அவர்களும் மற்றும் சிறப்பு விருந்தினராக சமூக சிந்தனையாளரும் வர்த்தகரருமான எம்.எச்.எம்.இப்ராஹீம் தொழிலதிபர் எம்.எச்.எம்.நாசர் அவர்களும் மற்றும் நலன் விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.