யாழ் மாவட்டத்தில் கடல் மீன் விற்பனை செய்யும் பல சந்தைகளில் குறைந்த விலையில் மீன் விற்பதாக கூறி பழைய மீன்களையும் டைனமைட் வைத்து பிடிக்கப்பட்ட மீன்களையும் கலப்படம் செய்து விற்பனையில் ஈடுபடுவதாக பொது மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
குறித்த பழுதடைந்த மீன்கள் பண்ணை நாவாந்துறை குருநகர் பாசையூர் திருநெல்வேலி குளப்பிட்டி சுன்னாகம் காக்கைதீவு அச்சுவேலி கல்வியங்காடு உள்ளிட்ட சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வருவதுடன் வார நாட்களில் தொடர்ச்சியாக பழுதடைந்த மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மீன் விற்பனையும் நடைபெற்று வருகிறது.
இச் சம்பவம் குறித்து அங்குள்ள மாநகரநகரசபை நகர சபை பிரதேச சபை சுகாதார பரிசோதகர்களுக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ள பேதிலும் எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.ஆனால் மீனவர்கள் தமக்கு மிஞ்சிய மீன்களை சேமித்து வைக்க குளிர் அறை சந்தையில் இல்லாமை தொடர்பில் குற்றம் சாட்டுவதாக கூறுகின்றனர்.
அத்துடன் மிஞ்சுகின்ற பழைய மீன்களை புதிதாக இறக்குமதி செய்யும் சில மீனவர்கள் ஏனைய புதிய மீன்களுடன் கலப்படம் செய்து விற்பனை செய்வதனால் வேலைப்பளுவுடன் சந்தைக்கு வரும் நுகர்வோர் பல்வேறு அசௌகரியங்ளுக்கும் பாதிப்புக்களுக்கும் உள்ளாகுகின்றனர்.
அத்துடன் குறைந்த விலைகளில் மீன்கள் விற்பனை செய்வதாக மீனவர்கள் சுய விளம்பரம் செய்து பழைய மீன்களை குறித்த சந்தையில் மீன்களை விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே தான் இவ்வாறான சில ஏமாற்றுவழி மீனவர்கள் குறித்து தகுந்த அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என பாதிக்கப்படட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.