புனித ரமழான் மாதம் முழுவதும் நோன்பிருந்து, அமல்கள் பலபுரிந்து அல்லாஹ்த்தஆலா விடம் பாவமன்னிப்பு கேட்டு திருந்தி இறையச்சமிக்க மனிதர்களாய் மாறி நிற்கும் நாம் இப்புவியில் அமைதியும் சமாதானமும் நிலவ பிரார்த்தனை புரிவோம்.
ஏழைகளின் பசியுணர்ந்து பித்ரா எனும் தர்மம் செய்து அனைவரும் இன்புற்றிருக்க நபிவழி நடப்போம்
எமது நாட்டில் வாழும் பல்லின சமூகங்களோடு சமாதானமாக வாழ்ந்து வரும் நாம் ஏனைய சமூகங்களினதும் நலன்களிலும் கவனம் செலுத்தும் அதேவேளை இந்த நாட்டின் பாதுகாப்புக்கும் துஆ செய்வோம்.
மேலும் எமது தாய்நாட்டில் வாழும் சகோதர இனங்களுடன் நல்லுறவை கட்டியெழுப்பி எமது நாட்டினதும் உலக மக்களினதும் நல்வாழ்க்கைக்காக எம்மை அர்ப்பணிக்க திடசங்கற்பம் பூணுவதன் மூலம் இப்பெருநாளை கண்ணியப்படுத்துவோமாக.
அன்புடன்
கெளரவ அல்ஹாஜ் காதர் மஸ்தான் எம்.பி,
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்ற வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சரும்.