சாய்ந்தமருதில் இப்தார் நிகழ்வும் துஆ பிராத்தனையும்!!!

எம்.வை.அமீர்-
சாய்ந்தமருது மீராசாஹிப் சதுக்கத்தில் வருடாந்தம் நடாத்தப்படும் இப்தார் நிகழ்வும் துஆ பிராத்தனையும், நோன்பின் 27 ஆம் தினமான 2018-06-13 ஆம் திகதி அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதி தேசிய அமைப்பாளரும் லங்கா அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தவிசாளரும் மெற்றோ பொலிடன் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் கல்முனை மாநகரசபையின் முன்னாள் முதல்வருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் இடம்பெற்றது.

ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குறித்த நிகழ்வில் அஷ்செய்க் எஸ்.ஏ.எம்.ஜினான் (அஸ்ஸஹ்தி) அவர்கள் மார்க்க சொற்பொழிவாற்றினார்.

நிகழ்வின்போது கல்முனை இராணுவ முகாமின் மேஜர் சஜித சுதுசிங்க,கல்முனை பொலிஸ் நிலைய உயர் அதிகாரிகள் கண்டி நகர அபிவிருத்தி மற்றும் அரச தொழில் முயற்சிகள் பிரதி அமைச்சரின் பிரத்தியோக செயலாளர் நௌபர் ஏ. பாவா முன்னாள் கல்வி அதிகாரி மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத் முன்னாள் மாநகரசபை உறுப்பினர் ஏ.நஸார்டீன் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.றசீட் (புர்க்கான்ஸ்) உள்ளிட்ட பிரமுகர்களும் உயர் மட்ட அதிகாரிகள், அதிபர்கள்,வர்த்தகர்கள்,ஊடகவியலாளர்கள் , இளைஞர் கழகங்களின் உறுப்பினர்கள்,விவசாயிகள்,மீனவர்கள்  பெண்கள் என பலரும் பங்கு கொண்டிருந்தனர்.















 

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -