சாய்ந்தமருதின் முன்னணி சமூக சேவை அமைப்புக்களில் ஒன்றான சாய்ந்தமருது சமூக அபிவிருத்தி அமைப்பு ஏற்பாடு செய்திருந்த மாபெரும் இப்தார் நிகழ்வு கடற்கரை வீதி திறந்த வெளியில் அமைப்பின் தவிசாளர் எம்.வை.பைசர் தலைமையில் 2018-06-12 ஆம் திகதி இடம்பெற்றது.
சமயங்களுக்கிடையே ஒற்றுமையை பிரதிபலிக்கும் வகையில் கல்முனை பௌத்த விகாரையின் பிரதம விகாராதிபதி ரன்முத்துக்கல தேரர்,பாண்டிருப்பு சிவன்கோவிலின் பிரதம குருக்கள் சிவசிறி க.ஐ.யோகராஜா குருக்கள் மற்றும் அஷ்செய்க் என்.ஜி.ஏ.கமால் (ஸ்லாஹி) போன்ற மதப் பெரியார்களுடைய பங்களிப்புடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் அஷ்செய்க் என்.ஜி.ஏ.கமால் (ஸ்லாஹி) அவர்கள் மார்க்க சொற்பொழிவாற்றினார்.
நிகழ்வின் ஏற்பாட்டாளர்களான ஜே.எம்.ஜெஸீல்,ஏ.சி.எம்.ஜலீல்,மன்சூர் முகம்மட் அஜீம் மற்றும் சக்கீ செயின் ஆகியோரது வழிநடத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வரும் அசோக் லேலன்ட் நிறுவனத்தின் தலைவருமான சிராஸ் மீராசாஹிப், முன்னாள் பிரதி முதல்வர் ஏ.ஏ.பஷீர் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் இராணுவ மற்றும் பொலிஸ் பிரிவின் உயர் அதிகாரிகள் கல்முனை பிராந்திய பிரதம மின் பொறியியலாளர் ஏ.ஆர்.எம்.பர்ஹான் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் வர்த்தகர்கள் மீனவர்கள் ஏனைய துறைகளைச் சார்ந்தோர் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
ஏற்பாட்டுப் பணிகளில் மைஸ்ரோ அமைப்பின் தலைவர் இக்தார் இஸ்மாயில் உள்ளிட்ட அமைப்பின் உறுப்பினர் உள்ளிட்டவர்கள் பங்குகொண்டிருன்தது குறிப்பிடத்தக்கது.