(ஆடியோ).,ஓட்டமாவடியில் பெருநாள் களியாட்ட நிகழ்வுகளை இடை நிறுத்துமாறு பள்ளிவாயல் நிருவாகங்கள் - உலமாசபையிடமும், பொலிசாரிடமும் பகிரங்க வேண்டுகோள்..

 விளக்கமளிக்கின்றார் பிரதேச சபை உறுப்பினர் ஹாமிட் மெளலவி..

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்- 
திர்வரும் நோன்பு பெரு நாளை முன்னிட்டு ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டு மைதானத்தில் பெருநாள் களியாட்ட நிகழ்வுகள் இடம் பெறுவதற்காக ஏற்பாடுகள் நடை பெறுவதனை முன்னிட்டு அதனை இடை நிறுத்த கோரி பல முறைப்பாடுகள் பொது மக்களால் பள்ளிவாயல் நிருவாகங்களுக்கு கிடைதுள்ளமையினால் கல்குடா பிரதேசத்தில் உள்ள பள்ளிவாயல்கள் நிருவாகங்கள் ஒன்றிணைந்து குறித்த களியாட்ட நிகழ்விற்கு அனுமதி வழங்கிய கல்குடா உலமா சபையிடமும், வாழைச்சேனை பொலிசாரிடமும் உடனடியாக அனுமதியினை இரத்துச் செய்து களியாட்ட நிகழ்வினை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு எழுத்து மூலமாக அறிவித்துள்ளதனை ஊடகங்களுக்கு தெரியப்படுத்துமாறு ஓட்டமாவடி பள்ளிவாயல் நிருவாக தெரிவித்தது.

மேலும் இக்களியாட்ட நிகழ்வினால் மார்க்கத்திற்கு முரணான விடயங்கள் இடம் பெறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுவதனால் குறித்த நிகழ்வினை இடை நிறுத்துவதற்கான நடவடிக்கையினை மேற் கொள்ளுமாறு குறித்த வேண்டுகோள் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு ஓட்டமாவடி பிரதேச சபையில் அங்கம் வகிக்கும் ஒன்பது உறுப்பினர்களின் கையெழுத்துடன் அல்மாஸ் சமூக சேவை நிறுவனத்தினால் நடாத்தப்படும் குறித்த காணிவேல் களியாட்ட நிகழ்வினை உடனடியாக நிறுமாறு பிரதேச சபை செயலாளர் ஊடாக தவிசாளர் ஐ.ரி.அமிஸ்டீனுக்கும் வேண்டுகோள் மகஜர் ஒன்று சமர்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது… 31.05.2018 அன்று நடை பெற்ற கோறலைப்பற்று மேற்கு பிரதேச சபை அமர்வில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட போதிலும், இப்பிரதேசத்தில் பரவலாக விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதுமான உலமா சபையும் சம்மந்தப்படாமல் கலாச்சார ச்ர்ர்கேடுகலுக்கு இட்டுச்செல்கின்ற காணிவேல் களியாட்ட நிகழ்வுகள் தொடர்பாக தகவல்கள் மயக்கமான முறையில் தவிசாளரினால் சபையில் முன்வைக்கப்பட்டது.

(தவிசாளர் குறிப்பிட்டது ஓட்டமாவடி சிறுவர் பூங்காவில் ஆண், பென் கலப்பிடம் இல்லாமல் உலமா சபை அதனை பொறுப்பேற்று நடாத்தும் என கெளரவ தவிசாளரினால் கூறப்பட்டது) அதனால் தற்பொழுது அமீ அலி விளையாட்டு மைதானத்தில் கலாச்சார சீரழிவுகளுக்கு இட்டுச்செல்லும் இக்காணிவேல் நிகழ்வுக்கு சபை உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தாமல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இக்களியாட்ட நிகழ்வினால் இப்பிரதேசத்தில் ஆண், பெண் கலப்பினால் சமூக சீர்கேடுகள் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளதினால் இதனை உடனடியாக நிறுத்துமாறு பிரதேச சபை உறுப்பினர்களாகிய நாம் தவிசாளர் செயலாளர் ஆகியோரை கேட்டுக்கொள்கின்றோம் குறித்த மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கும் மேலாக ஓட்டமாவடி மொஹைதீன் ஜும்மா பள்ளிவாயலினால் பொது மக்களுக்கான நோன்பு பெருநாள் அறிவித்தல் எனும் தலைப்பில் முக்கிய அறிவித்தல் ஒன்று சகல பல்ளிவாயல் நிருவாகங்களுக்கும் அனுப்பப்பட்டு பகிரங்கமாக ஒலி பெருக்கியில் பொதுமக்களுக்கு அறிவிக்குமாறு வேண்டப்பட்டுள்ளது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது… எதிர்வரும் நோன்பு பெரு நாள் தினத்தில் கல்குடா பிரதேச மக்கள் பின்வரும் ஒழுங்கு விதிகளை கடைப்பிடித்து செயற்படுத்துமாறு ஓட்டமாவடி மொஹைதீன் ஜும்மா பள்ளிவாயல் நிருவாகத்தினால் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

01- அனவரும் அமைதியான முறையில் பெருநாள் தொழுகையில் கலந்து கொள்ளவும்.

02- பெருநாள் தினத்தில் வீண் விரயங்கள் மற்றும் மார்க்க விரோத செயல்களை தவிர்த்து கொள்ளவும்.

03- ஆண், பெண் கலப்பு ஏற்படும் வீண் களியாட்ட நிகழ்ச்சிகளை முற்றாக புறக்கணிக்கவும்.

04- நாட்டின் சட்ட ஒழுங்குகளை பேணுவதுடன் வீதி ஒழுங்குகளையும் பேணிக் கொள்ளவும்.

05- ஒரு மாத காலம் நாம் நோற்ற நோன்புகள் வீண் போகாத வகையில் எந்த களியாட்ட நிகழ்ச்சிகலிலும் கலந்து கொள்லாமல் பூரண்மாக நிராகரித்து செயற்படவும்.

06- முடியும் வரை ஷவ்வால் மாத சுன்னத்தான் நோன்புகளை நோற்கவும். என குறித்த வேண்டுகோள் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகவே இவ்வாறு பிரதேசத்தில் குறித்த களியாட்ட நிகழ்வானது பல தரப்பினராலும் விமர்சத்திற்குள்ளாகியிருக்கும் நிலையில் குறித்த நிகழ்வில் ஏதாவது அசம்பாவிதங்கள் இடம் பெறுமாயின் அதற்கான முழுப்பொறுப்பினையும் பிரதேச சபையின் தவிசாளரே பொறுப்பெடுக்க வேண்டும் என பிரதேச சபை உறுப்பினர் ஹாமித் மெளலவி மற்றும் ஹனீபா Gs ஆகியோர்களிடம் வினவிய பொழுது தெரிவித்தனர்.

அத்தோடு கடந்த வருட பெருநாளை முன்னிட்டு வாழைச்சேனை பொது மைதானத்தில் இடம் பெற்ற களியாட்ட நிகழ்வானது அடுத்த நாள் கல்குடா ஜம்மியத்துல் உலமா சபையினால் இடை நிறுத்தப்பட்டிருந்தது. அதே போன்று இம்முறையும் வாழைச்சேனை வீசி பொது மைதானத்துக்கான அனுமதி குறித்த களியாட்ட நிகழ்விற்கு வாழைச்சேனை பிரதேச சபையினால் மறுக்கப்பட்ட நிலையிலேயே ஓட்டமாவடி பிரதேச சபையானது அமீர் அலி விளையாட்டு மைதானத்தில் களியாட்ட நிகழ்வினை நடாத்துவதற்கான அனுமதியினை வழங்கியுள்ளது என குற்றம் சுமர்த்துகின்றனர்.
ஆடியோ குறித்த நிகழ்வு தொடர்பான ஹாமிட்டின் கருத்து - 











இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -