கோறளைப்பற்று மேற்கு மற்றும் கோறளைப்பற்று மத்தி ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளில் வசித்துவரும் தந்தையை இழந்த மாணவ மாணவிகளுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்வு (9)ம் திகதி சனிக்கிழமை மீராவோடை தாருஸ்ஸலாம் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
குறித்த மாணவ மாணவிகள் எதிர்வரும் நோன்புப் பெருநாளை சந்தோஷமாக கொண்டாட வேண்டுமென்ற நோக்கில் கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியா நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் 97 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு அவர்களுக்கான புத்தாடைகளை மிக மகிழ்வுடன் பெற்றுக் கொண்டனார்.
புத்தாடை வழங்கும் இந்நிகழ்வில் நாவலடி மர்கஸ் அந்நூர் அரபுக் கலாபீடத்தின் நிருவாக உத்தியோகத்தர் ஏ.எல்.எம். உமர்தீன், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ரீ. அப்துர் ரஹுமான் மற்றும் மௌலவி யூ.எல்.எம். சாஜஹான் நஹ்ஜி ஆகியோர்காள் கலந்து கொண்டு புத்தாடைகளை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.