ஐந்து கட்டளைகள் (கவிதை)



ஐந்து கட்டளைகள்
++++++++++++++++
Mohamed Nizous

கலிமாவில்
கண்டிப்பாய் இரு.
இரக்கமில்லாதோரால்
எரிக்கப் பட்டாலும்
அரக்கத்தனமாய் தோல்
உரிக்கப் பட்டாலும்
கலிமாவின் கொள்கையை
காவு கொடுக்காதே

தொழு
எஞ்சியிருக்கும் மூச்சுக்கள் எண்ணிக்கை
இரண்டு இலக்கத்தை அடைந்தாலும்
கண்ணால் என்றாலும்
தன்னால் இயன்றவரை தொழு

ஸகாத் கொடு
சந்ததி சந்தியில் நிற்குமென
சாத்தான் பயம் தந்தாலும்
என்கதி எதிர்காலத்தில்
என்னவாகுமோ என
இதயம் அஞ்சினாலும்
அள்ளாஹ் தருவான் என
அள்ளிக் கொடு

நோன்பு வை
லுஹர் வரை படுக்குமளவு
சஹர் நேரத் தூக்கம்
சண்டித்தனம் செய்தாலும்
பகல் நேரத் தாகம்
பசியோடு சேர்ந்து
பாடம் நடத்தினாலும்
புனித ரமழானில்
புசிக்காது குடிக்காது
புலன்களை அடக்கி
நோன்பு வை
நோய்கள் பறக்கும்
உடலிலிருந்தும்
உள்ளத்தில் இருந்தும்

ஹஜ் செய்
தன் வீடு
தன் பணம்
தன் உறவு
அத்தனையும் துறந்து
அடி மண்ணுள் செல்ல முன்
அத்தனையும் துறந்து
அண்ணலாரின் மண் செல்
க.°.பாவைத் தவாபு செய்
கடமைகளை செய்
கருணை ரஹ்மானின்
அருளில் நனை.

இஸ்லாத்தைத் தாங்கும்
இந்தத் தூண்களை
இயன்றவரை தாங்கு
இறைவனின் அன்பைப் பெறு

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -