மலையக மக்களுக்கு மண்ணெண்ணெய் - ஜனாதிபதி மைத்திரிபால நடவடிக்கை


லையக மக்களுக்கு மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்க உடன் நடவடிக்கை எடுப்பார் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதிமொழி வழங்கி உள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் இணை தலைவர்களை இவர் நேற்று முன் தினம் புதன்கிழமை இரவு ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து பேசினார்.

அப்போது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் இணை தலைவர்களில் ஒருவரும், அருணோதய மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகமான விசேட வைத்திய நிபுணர் தேசமானிய டாக்டர் கே. ஆர். ஹிர்சாந் மலையக மக்களுக்கு மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்க உரிய நடவடிக்கை எடுங்கள் என்று ஜனாதிபதியிடம் கோரினார்.

இக்கோரிக்கையை ஏற்று கொண்ட ஜனாதிபதி இதற்கு உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுப்பார் என்று வாக்குறுதி அளித்தார்.

மண்ணெண்ணெய் அடங்கலாக எரிபொருட்களின் விலை நாட்டில் அதிகரிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -