நாடறிந்த எழுத்தாளர் வித்தகர் கலாபூசணம் முகில்வண்ணனின் மூன்று நூல்கள் இன்று(3) வியாழக்கிழமை கல்முனையில் வெளியிட்டுவைக்கப்படவுள்ளது.
கல்முனை தமிழ்ப்பிரதேச செயலக கலாசாரப்பேரவையின் ஏற்பாட்டில் பிரதேசசெயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் கந்தையா லவநாதன் தலைமையில் மேற்படி வெளியீட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது.
முகில்வண்ணன் எனும் வே.சண்முகநாதன் எழுதிய இளவரசன் எனும் சிறுவர் நூலும் இராசாத்தி எனும் நாவல் நூலும் மனுஷ்யா எனும் சிறுகதை நூலும் இன்று வெளியிட்டுவைக்கப்படவுள்ளன.
நிகழ்வில் நூல்தொடர்பிலான அணிந்துரைகளை விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா வித்தகர் கலாபூசணம் இராகி கிருஸ்ணபிள்ளை பைந்தமிழ்க்குமரன் ஜெ.டேவிட் ஆகியோர் நிகழ்த்துவர்.
நூல் வெளியீட்டுரைகளை வித்தகர் உமாவரதராஜன் கலாநிதி பரதன் கந்தசாமி வித்தகர் கலாபூசணம் மு.சடாட்சரன் ஆகியோர் நிகழ்த்துவர்.
ஏற்புரையை நூலாசிரியர் முகில்வண்ணன் நிகழ்த்த பிரதேச கலாசார உத்தியோகத்தர் த.பிரபாகரன் நன்றியுரையாற்றுவார்.