இனங்களுக்கிடையில் அமைதி சீர்குலைக்கப்பட்டு அழிவுகள் ஏற்படுத்தப்படும்பொழுது டும்பொழுது அதிகாரத்திலுள்ளவர்கள் அமைதியாக வேடிக்கை பாரத்துக் கொண்டிருக்க முடியாது என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமத் தெரிவித்தார்.
சமீப சில நாட்களுக்கு முன்பாக கிழக்கின் அம்பாறை நகரிலும், இந்தவாரம் மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தின் சில பகுதிகளிலும் மூன்றாவது சிறபான்மைச் சமூகமான முஸ்லிம்களைக் குறிவைத்து நடாத்தப்படும் தாக்குதல்கள் தொடர்பில் கவனஞ் செலுத்தி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை 06.03.2018 வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ{ம் இணைந்து சுமார் இரண்டரை வருட காலம் நடாத்திய மாகாண நல்லாட்சியின்போது கிழக்கில் வாழும் தமிழ், முஸ்லிம் சிங்கள சமூகங்களக்கிடையில் ஒரு நூலிழை அளவு கூட இன விரிசல் ஏற்பட்டதில்லை.
அத்தகையதொரு இன ஐக்கியத்திற்காக தமிழ் பேசும் சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ{ம் அதிக சிரத்தை எடுத்து அதிக தியாகங்களைச் செய்து பாடுபட்டுழைத்தோம்.
ஆனால், இப்பொழுது மாகாண சபை ஆட்சி முடிவுக்கு வந்து அதிகாரம் ஆளுநர் கைகளுக்கு மாறியிருக்கின்ற நிலையில் ஏற்கெனவே மட்டக்களப்பு வாழைச்சேனையில் தமிழ்-முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலும் கடந்த வாரம் அம்பாறையிலும் தீய சக்திகள் இன வாதத்தை விதைத்து விட்டு அதை நாடு பூராகவும் விரிவடையச் செய்வதற்கு முனைந்து நிற்கின்றன.

கடந்த காலங்களில் இன அமைதியின்மையால் ஏற்பட்ட அழிவுகள் அதாரபூர்மான கற்றுக் கொண்ட பாடங்களாக நம் கண் முன்னே இருக்கும்போது இதனைக் கருத்திற்கொள்ளாது அதிகாரமுள்ளவர்கள் கண்மூடித்தனமாக இருந்து கொண்டு வேடிக்கை பார்ப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
எந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களாயினும் அப்பாவிகள் பாதிக்கப்படும் பொழுதெல்லாம் அதிகாரம் தன் கடமையை சரிவரச் செய்ய வேண்டும். பரபட்சம் இன்றி சட்டம் ஒழுங்கு சீர் குலையாமல் பாதுகாக்க வேண்டும்.

ஆனால் அது கடந்த சில நாட்களாக அம்பாறை நகரில் சீர் குலைக்கப்பட்டுள்ள அமைதி இயல்புக்குத் திரும்பும் முன்னர் அதனைத் திசை திருப்பும் முகமாக கண்டி மாவட்டத்தில் கலகத்தை இடம்மாற்றியுள்ளனர்.
இதற்கு அதிகாரத்திலுள்ளோர் பதில் சொல்லியாக வேண்டும்.
ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தபொழுதும் மக்களின் அமைதிக்குப் பங்கம் விளைவிக்கப்படுகின்றதென்றால் அங்கு மறைமுக சதி வலை பின்னப்படுகிறதென்று பொருள் கொள்ள முடியும்.
இத்தகைய நாசகார வேலைகளுக்கு இடமளிப்பது நல்லாட்சி என்றே சொல்லுக்கே நல்லதல்ல. இனி வரும் சமுதாயம் இனங்களுக்கிடையிலான அழிவுகளிலிருந்து கற்றுக் கொள்வதற்கு அதிகாரத்திலுள்ளளோர் வழிசமைத்துவிடக் கூடாது. இனவாதத்தைத் தூண்டுகின்ற எந்தவொரு இழிவான அரசியல் கலாச்சாரத்தையும் இளஞ் சந்ததிக்குக் கையளிக்கக் கூடாது ” என்றார்.