மதகுருமாருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக வதந்திகள் பரவி வருகின்றன. இத்தகைய எந்தவொரு சம்பவமும் இடம்பெறவில்லை என பிரதமர் கூறினார்.
நாட்டின் தற்போதைய நிலவரத்தின் முன்னிலையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நேற்று பிரதமர் விடுத்த விசேட அறிக்கையொன்றை விடுத்தார்.
முப்படைகளினதும், பொலிசாரினதும் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பு மத்திய பிரதேச பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மன் டயஸிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
முப்படைகளினதும், பொலிசாரினதும் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பு மத்திய பிரதேச பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மன் டயஸிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
எந்தவொரு அசாதாரண சூழ்நிலையையும் கட்டுப்படுத்தும் வகையில் தயாராக இருக்குமாறு பாதுகாப்புப் படைகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
நாடெங்கிலும் அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டு கண்டி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அமைதியைப் பேண வேண்டுமென பிரதமர் கோரிக்கை விடுத்தார்.
நாடெங்கிலும் அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டு கண்டி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அமைதியைப் பேண வேண்டுமென பிரதமர் கோரிக்கை விடுத்தார்.
போலிப் பிரசாரங்களில் சிக்காமல் நாட்டில் அமைதியைப் பேணுவது முக்கியமானது. நாட்டில் பாதுகாப்பான சூழலை உருவாக்கி அமைதி பேண உதவுவமாறு அவர் சகல மக்களிடமும் கோரிக்கை விடுத்தார்.