கடற்கரையில் ஒதுங்கிய சுனாமி எச்சரிக்கை போயா



Murshid Valaichenai
வாகரை காயான்கேணி ஆணைக்கல் கடற்கரையில் ஆழ்கடல் நிலநடுக்கத்தை அளவிடும் சுனாமி முன்னெச்சரிக்கை கருவி கரையொதுங்கியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம்.றியாஸ் தெரிவித்தார்.

சர்வதேச ஆழ்கடல் பகுதியில் இடம்பெறும் நிலநடுக்கத்தை அளவிட்டு அதனை சுனாமி முன்னெச்சரிக்கை நிலையத்திற்கு தகவல் வழங்கும் மிதக்கும் வோயா காயான்கேணி ஆணைக்கல் கடற்கரையில் நேற்று வியாழக்கிழமை கரை ஒதுங்கியுள்ளது.

காயான்கேணி பிரதேச மீனவர்களிடத்தில் விசாரணைகளை நடாத்திய போது முன்னெச்சரிக்கை கருவி மிதக்கும் வோயா கரை ஒதுங்கிய போது இதில் அன்டனா மற்றும் பல்வேறு உபகரணங்கள் தென்பட்டதாகவும்,தற்போது அவற்றில் எந்தவித உபகரணமும் இல்லை எனவும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த முன்னெச்சரிக்கை கருவி மிதக்கும் வோயாவானது சர்வதேச ஆழ்கடல் பகுதியில் இருந்து இங்கு வந்திருக்கலாம் எனவும், இந்த வோயாவை கடற்படை அதிகாரிகளின் உதவியுடன் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை அனர்த்த முகாமைத்துவ பிரிவு மேற்கொண்டு வருகின்றது.

மேலும் இதில் இருந்து திருடப்பட்டதாக கூறப்படும் பொருட்கள் தொடர்பாக வாகரை பொலிஸில் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும்ää இது தொடர்பான விசாரணை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவியாளர் ஏ.எம்.எம்.ஹசீர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -