தமது தந்தையை கருணை அடிப்படையில் விடுதலை செய்துஇ பெற்றோரை இழந்து நிற்கும் எமக்கு உதவுமாறு இன்று கௌரவ ஜனாதிபதி அவரிகளிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். பா ம உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் அவர்களின் ஊடாக குறித்த கடிதம் ஜனாதிபதி அவர்களிற்கு கிடைக்கும் வகையில் இன்று ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. கிளிநொச்சி பிரதேச சபைகளிற்கு தெரிவான சுதந்திர கட்சி பிரதேச சபை உறுப்பினர்கள் குறித்த கடிதத்தினை பெற்று அங்கஜன் இராமநாதன் அவர்கள் ஊடாக அனுப்பி வைத்துள்ளனர்.
இதன்போது தமது தந்தையை விடுதலை செய்து தருமாறு ஜனாதிபதி மாமாவிடம் கோரிக்கையிட்டு இன்று கடிதமொன்றை அனுப்பியுள்ளதாக பாதிக்கப்பட்ட சிறுவன் தெரிவித்தார்.