இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது :- பாரிஸின் 10 ஆவது அரோன்டிஸிமென்ட் பகுதியில் 35 வயதான இலங்கையர் தனது மனைவியுடன் இந்திய உணவகங்கள் அமைந்துள்ள பகுதியில் உணவு உண்ண சென்றுள்ளார்.
உள்ளூர் நேரப்படி 8.30 மணியளவில் முக மூடி அணிந்த இருவர் திடீரென்று அந்த வழியாக புகுந்து குறித்த இலங்கையரை சரமாரியாக வாளால் தாக்கியுள்ளார்.
இந்த தாக்குதலில் குறித்த இலங்கையருக்கு தலை, கழுத்து, மணிக்கட்டு என உடலில் பல இடங்களில் வெட்டு விழுந்துள்ளது. குறித்த நபர் குற்றுயிராக சரிந்த நிலையில் தாக்குதல் நடத்திய இருவரும் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
இந்நிலையில் வாள் வெட்டிற்கு இலக்காகி படுகாயமடைந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்னமும் உயிருக்கு போராடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதல் தொடர்பில் மாயமான மர்ம நபர்கள் இருவரையும் பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.மேலும் தாக்குதல் தொடர்பில் உறுதியான காரணம் என்ன என்பது குறித்து இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை.