கொழும்பு கம்பன் கழகத்தின் ஆரம்ப நிகழ்வு வியாழக்கிழமை பி.பகல் 05 மணிக்கு கம்பன் கழகத்தின் தலைவி மாலா சபாரத்தினம் தலைமையில் ஆரம்பமானது. இந் நிகழ்வுகள் 29 - ஏப்ரல் 01 வரை வெள்ளவத்தை இராமக்கிருஸ்னன் மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது. நேற்றைய ஆரம்ப வைத்தில் வெள்ளவத்தை காலீவீதியில் இருந்து இராமக்கிருஷ்னன் வீதி வரை கம்பனை சுமந்து வீதி உலா தந்து மண்டபத்தை அடைந்தனா்.
முதல் நாள் அமா்வில் கம்பனை விளக்கிடும் விலங்குகள் நுால் வெளியீட்டு வைக்கப்பட்டது. நுாலின் முதற்பிரதியை இலக்கிய புரவலா் ஹாசீம் உமா் விழா தலைவி மாலா சபாரத்தினம், மலேசியா நாட்டின் விளையாட்டு இளைஞா் அமைச்சா் டத்தோ எம் சரவனிடமிருந்து பெற்றுக் கொண்டாா். அத்துடன் சிரேஸ்ட ஒலி, ஒழி ஊடகவியலாளா் அருநா செல்லத்துறை., ஆர்.புன்னியமூா்த்தி, கவிஞா் வரதராஜன், சிதாகஷானிந்தர சுவாமிகள் ஆகியோா்களது தமிழ் ்இலக்கிய தொண்டுகளுக்காக கௌரவிக்கப்பட்டனா்.
அத்துடன் பல்கலைக்கழகக மாணவா்களுக்கான புலமைப்பரிசில் திட்டம், வறுமைக்கோட்டின் கீழ் வாழ் குடும்பத்தினருக்கு உதவுக் கரம் நீட்டும் அநாதைஆச்சிரமித்திற்கு நிதி வழங்கள் போன்ற திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டன.
மேலும் இவ் நான்கு நாற்களிலும் காலை பிற்பகல் அமா்வுகளில் இந்தியா மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் இருந்து வருகை தந்துள்ள அறிஞா்களிள் உள்ளுாா் கலைஞா்களினதும் பங்களிப்போடு பட்டி மண்ரம், வழக்காடு, விவாத அரங்கு, கேலி உரையாடல், சிந்தனை அரங்கு, எழில்இசைகள், நாட்டிய சங்கமம் ஆகிய நிகழ்வுகள் நடைபெறும்.
இறுதி அமா்வில் அமைச்சா்களான ரவுப் ஹக்கீம், மனோகனேசன், பாராளுமன்ற உறுப்பிணா் ஆறுமுகம் தொண்டமான் , எம் சுமந்திரன் ஆகியோறும் கலந்து சிறப்பிப்பா்.