யார் அந்த‌ அடிப்ப‌டைவாதிக‌ள் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் கேள்வி



க‌ண்டி தாக்குத‌ல் என்ப‌து அடிப்ப‌டைவாதிக‌ளால் திட்ட‌மிட‌ப்ப‌ட்ட‌ ஒன்று என‌ யார் அந்த‌ அடிப்ப‌டைவாதிக‌ள் என‌ சொல்லாம‌ல் வெறும‌னே மொட்டையாக‌ பொது நிர்வாக‌, ச‌ட்ட‌ம், ஒழுங்கு அமைச்ச‌ர் ம‌த்தும‌ ப‌ண்டார‌
சொல்லியுள்ளத‌ன் மூல‌ம் அவ‌ர்க‌ள் இவ‌ர் முஸ்லிம்க‌ளை ச‌மாளித்து சிங்க‌ள‌வ‌ர்க‌ளை திர்ப்திப்ப‌டுத்தியுள்ளார் என‌ உல‌மா க‌ட்சி தெரிவித்துள்ள‌து.
இது ப‌ற்றி உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வி க‌பூரி கூறிய‌தாவ‌து,
அண்மையில் முஸ்லிம் க‌வுன்சில் ம‌ற்றும் உல‌மா ச‌பை என்ப‌ன‌ இவ‌ரை ச‌ந்தித்த‌ போதே இவ்வாறு இவ‌ர் கூறியுள்ளார். இங்கு அமைச்ச‌ர் சிங்க‌ள‌, பௌத்த‌ அடிப்ப‌டைவாதிக‌ளே இக்க‌ல‌வ‌ர‌த்தை திட்ட‌மிட்டு நிறைவேற்றியுள்ள‌ன‌ர் என்ற‌ ப‌கிர‌ங்க‌ உண்மையை சொல்லாம‌ல் வெறும‌னே அடிப்ப‌டைவாதிக‌ள் என‌ சொல்லியுள்ளமை உண்மையை சொல்ல‌ ம‌றுக்கும் இவ‌ர‌து ச‌ராச‌ரி அர‌சிய‌லை வெளிக்காட்டியுள்ள‌து. அவ‌ர‌து இக்க‌ருத்தை கேட்டு அத‌ற்கு ச‌ரியான‌ ப‌திலை வ‌ழ‌ங்காம‌ல் த‌லையாட்டிவிட்டு முஸ்லிம் க‌வுன்சிலும் உல‌மா ச‌பையும் வ‌ந்தார்க‌ளா என்ப‌து தெரிய‌வில்லை. அவ்வாறு வ‌ந்திருந்தால் அது க‌ண்டிக்க‌த்த‌க்க‌ ஒன்றாகும்.

நாட்டில் ஒவ்வொருவ‌ரும் த‌த்த‌ம‌க்கு வாசியாக‌ அடிப்ப‌டைவாத‌ம், தீவிர‌வாத‌ம் என‌ சொல்லிக்கொள்கிறார்க‌ள். இல‌ங்கை முஸ்லிம்க‌ள் ம‌த்தியில் பிழையான‌ அடிப்ப‌டை வாத‌மோ, தீவிர‌வாத‌மோ இல்லை. இன்று வ‌ரை இல‌ங்கை முஸ்லிம்க‌ள் எந்த‌ ச‌மூக‌த்துக்கும் எதிராக‌ தாமாக‌வே க‌ல‌வ‌ர‌த்தை உருவாக்கிய‌தாக‌ இன்று வ‌ரை ஒரு நிக‌ழ்வு கூட‌ இல்லை. இல‌ங்கை முஸ்லிம் ச‌மூக‌ம் இன்று வ‌ரை தாக்க‌ப்ப‌டும் ச‌மூக‌மாக‌ உள்ள‌தே த‌விர‌ சுய‌மாக‌ கூட்டாக‌ வேறு இன‌ அப்பாவி பொதும‌க்க‌ள் மீது தாக்குத‌ல் ந‌ட‌த்திய‌தில்லை.
க‌ட‌ந்த‌ க‌ண்டி சிங்க‌ள‌ பௌத்த‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ தாக்குத‌லின் போது ஆயிர‌ம் கோடி ரூபாவுக்கு மேல் முஸ்லிம்க‌ள் இழ‌ந்துள்ளார்க‌ளே த‌விர‌ ஒரு கோடி ரூபா சொத்தை முஸ்லிம்க‌ளால் ஒரு சிங்க‌ள‌ வ‌ர்த்த‌க‌ராவ‌து இழ‌ந்த‌தாக‌ ப‌திவு இல்லை.
உண்மைக‌ள் இப்ப‌டியிருக்கும் போது பொறுப்பு வாய்ந்த‌ ச‌ட்ட‌ம் ம‌ற்றும் ஒழுங்கு அமைச்ச‌ர் வெறும‌னே அடிப்ப‌டைவாதிக‌ள் என‌ சொல்வ‌து ஒழுங்க‌ற்ற‌ ஒன்றாகும்.
ஆக‌வே ச‌ட்ட‌ம் பாதுகாப்புக்கான‌ அமைச்ச‌ர் க‌ண்டி க‌ல‌வ‌ர‌த்தில் ஈடு ப‌ட்ட‌ சிங்க‌ள‌ அடிப்ப‌டைவாதிக‌ளை சுட்டிக்காட்டாம‌ல் விச‌ய‌த்தை திசை திருப்பி குற்ற‌வாளிக‌ளை த‌ப்புவிக்க‌ முய‌லாம‌ல் சிங்க‌ள‌ பௌத்த‌ அடிப்ப‌டைவாதிக‌ளே இத‌னை அரங்கேற்றின‌ர் என்ப‌தையும் அர‌சின் உத‌வியின்றி இப்ப‌டியொரு பாரிய‌ திட்ட‌மிட்ட‌ க‌ல‌வ‌ர‌த்தை முன்னெடுக்க‌ முடியாது என்ப‌தையும் ப‌கிர‌ங்க‌மாக‌ ஏற்றுக்கொள்ள‌ வேண்டும் என‌ உல‌மா க‌ட்சி கோரிக்கை விடுக்கிற‌து.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -