பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பாராளுமன்றத்திற்கு வந்து வாக்குறுதி வழங்கும் வரை சபை நடுவில் அமர்ந்து தங்களுடைய எதிர்ப்பினை தெரிவித்து இருந்தார்கள்.அது மாத்திரம் அல்லாமல் சபைக்கு தலைமைதாங்கி நடத்திக்கொண்டு இருந்த குழுகளின் பிரதி தலைவர் செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் உடனடியாக சபாநாயகர் கரு ஜெயசூரிய அவர்களை சபைக்கு அழைத்து தலைமை தாங்கி தீர்வு வழங்கும் படி அழைத்து விடைபெற்றார்.
பிரதி அமைச்சர் ஹரிஸ் அவர்கள் தான் இவ் போராடத்திற்கான முழு ஏற்பாடுகளை செய்து இருந்தார் என்பதை சபையில் நேரடியாக அவதானிக்க முடிந்தது.
அதனை யாராலும் மறுக்கவே மறுக்கவே முடியாது.பாராளுமன்ற உறுப்பினர்களே இதற்கு சாட்சியம் ஆவார்கள்.அவரோடு இணைந்து பிரதி அமைச்சர் அமிர் அலி அவர்களும் சபையில் அமர்ந்து இருந்த ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களையும்,லேபியில் இருந்த ஏனைய உறுப்பினர்களையும் ஒருமித்து அழைத்து சபை நடுவிலே அமர்ந்தார்கள்.
ஆனால் சபையிலேயே அமர்ந்து கொண்டு புதினம் பார்ப்பது போல உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா பார்த்து கொண்டு இருந்தார்.
எது எவ்வாறு இருப்பினும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் உறுத்தலான இரு தடைகள் அடங்கிய பேச்சில் எதிர்கட்சி உறுப்பினர்களையும் திரும்பி பார்க்க வைக்கும் அளவுக்கு உணர்வு பூர்வமாக பேசி இருந்தார் அதுபோல அமைச்சர் ரிசாட் பதியுத்தீன் அவர்களும் எமது சமூகத்திற்காக உணர்வுமிக்கதாக பேசி இருந்தார்.
முதலில் பிரதி அமைச்சர் ஹரிஸ்,அமிர் அலி, பாராளுமன்ற உறுப்பினர்களான இஸாக்,மன்சூர்,நஸீர், தெளபீக்,முஜிபுர் ரகுமான்,இம்ரான் மஹ்ரூப், ஆகியோர் அமர்ந்து சபை நடவடிக்கைகளை தொடர்ந்து கொண்டு செல்லாமல் எமது மக்களுக்காக குரல் கொடுத்தனர்.பின்னர் பைசால் காசிம் வருகை தந்தார்.அதன் பின்னர் அமைச்சர் ரிசாட் மற்றும் நபவி ஆகியோர் கலந்து கொண்டனர்.