நாடு முழுவதும் ஜனாதிபதி செயலகத்தினால் முன்னெடுத்துவரும்
நஞ்ஞற்ற நாடு வேலைத்திட்டத்தினை அமுல்படுத்தி நாட்டில் இரசாயன செயற்பாடுகளை இல்லாதொழித்து நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் நஞ்சற்ற நாடு தேசீய வேலைத்திட்டம் இன்று(18) கந்தளாய் விதை விவசாய உற்பத்தி நிலையத்தில் திருகோணமலை மாவட்ட கமநல அபிவிருத்தி நிலையத்தின் உதவி ஆணையாளர் எஸ்.புனித குமார் தலைமையில் இடம்பெற்றது .இதன்போது நஞ்ஞற்ற உணவு உற்பத்தி அறுவடையும் இடம் பெற்றது இவ் நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக நஞ்ஞற்ற உணவு உற்பத்தி திட்டத்தின் தேசிய ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான அத்துனரலிய ரத்திணதேரர் உட்பட சமூக சேவைகள் கண்டிய மரபுரிமைகள் அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க மற்றும் முன்னால் மாகாண சபை உறுப்பினர் பிரியந்த பத்திரண முப்படை அதிகாரிகள் அரச திணைக்கள ஊழியர்கள் சுமார் 3000 க்கும் மேற்பட்ட விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்.